ADVERTISEMENT

2026 சட்டமன்ற தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

Published On:

| By Kavi

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைமை இன்று (ஏப்ரல் 3) வெளியிட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மற்ற கட்சிகள் எல்லாம் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பணிகளை தொடங்கிய நிலையில், காங்கிரஸ் மட்டும் வெளியிடாமல் இருந்தது.

ADVERTISEMENT

நேற்றிரவு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

அதைத்தொடர்ந்து டெல்லியில் நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இன்றிரவு அல்லது நாளை வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று அறிவித்தார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் 28 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி,

ADVERTISEMENT

பொன்னேரி (SC)- துரை சந்திரசேகர்

வேளச்சேரி – JMH ஆசன் மௌலானா

ஸ்ரீபெரும்புதூர் – செல்வப்பெருந்தகை

சோளிங்கர் – முனிரத்தினம்

ஊத்தங்கரை – . குப்புசாமி

கிருஷ்ணகிரி- செல்லக்குமார்

பென்னாகரம் – GKM தமிழ்குமரன்

ஆத்தூர் – எஸ்.கே.அர்த்தனாரி

ஈரோடு (கிழக்கு) கோபிநாத் பழனியப்பன்

உதகமண்டலம் – ராமச்சந்திரன்

கவுண்டம்பாளையம் – K.P. சூர்ய பிரகாஷ்

சிங்காநல்லூர் –  ஸ்ரீநிதி நாயுடு

துறையூர் – விச்சு லெனின் பிரசாத்

கடலூர்- சந்திரசேகரன்

மயிலாடுதுறை – ஜமால் யூனுஸ் முகமது

அறந்தாங்கி – டி. ராமச்சந்திரன்

காரைக்குடி – S. மாங்குடி

உசிலம்பட்டி – T. சரவண குமார்

சிவகாசி – கணேசன் அசோகன்

திருவாடானை – ராம கருமாணிக்கம்

ஸ்ரீவைகுண்டம் – ஊர்வசி அமிர்தராஜ்

சங்கரன்கோவில்- சங்கை கணேசன்

அம்பாசமுத்திரம் -வி.பி. துரை

நாங்குநேரி – ரூபி மனோகரன்

குளச்சல் – தாரகை கத்பர்ட்

விளவங்கோடு – பிரவீன்

கிள்ளியூர் –  ராஜேஷ் குமார்

ஆகியோர் போட்டியிடுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன், காங்கிரஸ் வேட்பாளராக பென்னாகரம் தொகுதியில் களமிறங்குகிறார் என கடந்த மார்ச் 28ஆம் தேதி நமது மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தகக்து.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share