ADVERTISEMENT

50 அடி உயரத்தில் கிரேனில் தொங்கியபடி யோகா செய்து சிறுவன் சாதனை

Published On:

| By Minnambalam Desk

Yoga Reocrd

கோவையில் 50 அடி உயரத்தில் கைகளை மட்டுமே பேலன்ஸ் செய்து கிரேனில் தொங்கியபடி யோகா செய்து 12 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார். Coimbatore Yoga

கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரூபிகா. இவரது மகன் புவேஷ். அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார்.

ADVERTISEMENT

12 வயதாகும் புவேஷ், சிறு வயது முதலே யோகாவில் ஆர்வம் கொண்டிருந்தார். பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இரண்டு கின்னஸ் சாதனை பெற்றுள்ளார்.

சிறுவன் புவேஷ், தற்போது 50 அடி உயரத்தில் தொங்கியபடி யோகா செய்து புதிய உலக சாதனை செய்துள்ளார்.

ADVERTISEMENT

சிறுவன் புவேஷ், கிரேன் உதவியுடன் ஐம்பது அடி உயரத்தில் தொங்கியபடி உபவிஷ்த கோணாசனம் எனும் ஆசனத்தை தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் 27 விநாடிகள் தொங்கியபடி செய்து காட்டினார். இது பார்வையாளர்களை அசர வைத்தது.

பார்வையாளர்களை பரபரப்புடன் வைத்திருந்த வைத்திருந்த புவேஷ் தனது சாதனையை நிறைவு செய்து அசால்ட்டாக கிரேனில் இருந்து இறங்கினார்.

ADVERTISEMENT

தனியார் பள்ளியில் பயிலும் சக மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கைகளை தட்டி சிறுவனை உற்சாகப்படுத்தினர்.

இவரது இந்த சாதனையை ரஷ்ய நாட்டை சேர்ந்த யூனியன் உலக சாதனை புத்தக நிறுவனத்தினர் அங்கீகரித்து சான்றிதழ்களை வழங்கினர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share