ஐடி துறையில் ஃபிரெஷர்களுக்கு வாய்ப்பு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான காக்னிசன்ட் (Cognizant), அனலிஸ்ட் ட்ரெய்னி (Analyst Trainee) பணியிடங்களுக்கான ஃபிரெஷர் ஆட்சேர்ப்பை (Freshers Recruitment) அறிவித்துள்ளது.
இந்த வேலைவாய்ப்பு, ஐடி துறையில் தனது தொழில்வாழ்க்கையை தொடங்க விரும்பும் பட்டதாரிகளுக்கு முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. நாட்டின் பல நகரங்களில் பணியமர்த்தப்பட உள்ளதால், விண்ணப்பதாரர்கள் இடமாற்றத்திற்குத் தயாராக இருக்க வேண்டும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
இந்த ஆட்சேர்ப்பில், 3 ஆண்டு முழு நேர பட்டப்படிப்பு (பி.எஸ்.சி, பி.சி.ஏ, பி.காம், பி.ஏ, பி.பி.ஏ போன்றவை) முடித்தவர்கள், 2024, 2025 மற்றும் 2026 பேட்ச் மாணவர்கள், குறைந்தபட்சம் 50% முதல் 60% மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுகின்றனர்.
மேலும், நிலுவை அரியர்ஸ் இல்லாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என்ன வேலை?
அனலிஸ்ட் ட்ரெய்னி பணியில் தேர்வு செய்யப்படும் நபர்கள் ஐடி ஆதரவு சேவைகள் வழங்குதல், கிளவுட் மற்றும் டிஜிட்டல் வொர்க்பிளேஸ் தொடர்பான பணிகள், வாடிக்கையாளர் பிரச்சினைகளை தீர்க்குதல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள்.
இந்த பணிகள் பெரும்பாலும் 24/7 ஷிப்ட் அடிப்படையில் இருக்கும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பளம் மற்றும் பணியிடம்
இந்த பணியிடங்களுக்கு, ஆண்டு சம்பளம் சுமார் ₹2.8 லட்சம் முதல் ₹4 லட்சம் வரை வழங்கப்படலாம் என்பது துறைத்தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணியிடம்: சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே உள்ளிட்ட இந்தியாவின் பல நகரங்கள்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் முழுவதும் ஆன்லைன் முறையில் நடைபெறும். காக்னிசன்ட் அதிகாரப்பூர்வ கரியர் தளத்தில் பதிவு செய்ய வேண்டும், தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வி தகவல்களை பதிவேற்ற வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 15, 2026 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் பொதுவாக ஆன்லைன் மதிப்பீடு, தொழில்நுட்ப / கம்யூனிகேஷன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
காக்னிசன்ட் நிறுவனம் அறிவித்துள்ள இந்த அனலிஸ்ட் ட்ரெய்னி வேலைவாய்ப்பு, ஃபிரெஷர்களுக்கு ஐடி துறையில் நுழைய ஒரு முக்கிய வாய்ப்பாகும். குறுகிய காலக்கெடு உள்ளதால், தகுதியானவர்கள் விரைவாக விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
