தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கை 2025 கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும், இருமொழிக் கல்விக் கொள்கையில் உறுதியாக இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
கடந்த 2017–2018 கல்வியாண்டில் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதிவந்த நிலையில், இந்த ஆண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 ஐ செயல்படுத்தும் வகையில், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நடப்பு கல்வியாண்டு முதல் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும் என்றும், முந்தைய 11ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் 2030ஆம் ஆண்டு வரை அரியர் தேர்வு எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.