வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட வெள்ளி.. தங்கம் விலையும் அதிரடி உயர்வு

By Pandeeswari Gurusamy

|

Published on 13 Oct 2025, 12:07 PM

gold and silver price on 13 October 25 in chennai

சென்னையில் ஆபரண தங்கம் இன்று (அக்டோபர் 13) அதிரடியாக ஒரு சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.

உலகளாவிய தங்கத்தின் தேவை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது இந்தியாவில் மட்டும் 34,600 டன் தங்கம் இருக்கக் கூடும் என உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து வருவது நகை பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத்தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.11,525க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.92,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.195க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.1,95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
12-10-202592,000
11-10-202592,000
10-10-202591,720
9-10-202591,400 
8-10-202591,080
7- 10-202589,600
6-10-202589,000
5-10-202587,600
4-10-202587,600
3-10-202587,200

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel