ADVERTISEMENT

“Bro.. Arasiyal weekend trip illai.. Full time job” பெரம்பலூர் பிரச்சாரத்தை ரத்து செய்த விஜய்க்கு எதிர்ப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

Bro Arasiyal weekend trip illai Full time job

தவெக தலைவர் விஜய் பங்கேற்ற திருச்சி, அரியலூர் பிரச்சாரம் முடிவடைய காலதாமதம் ஏற்பட்டதால் பெரம்பலூர் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் பெரம்பலூரின் பல்வேறு பகுதிகளில் விஜய்யை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார பயணத்தை தொடங்கி உள்ளது. தவெக தலைவர் விஜய் நேற்று (செப்டம்பர் 13) திருச்சியில் மக்களை சந்தித்து தனது சுற்று பயணத்தை தொடங்கினார். திருச்சியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் திருச்சி நகருக்குள் முதல் பிரச்சார இடமான மரக்கடை பகுதிக்கு செல்வதற்கே 5 மணி நேரத்திற்கு மேல் ஆனது. காலை 10 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த பிரச்சாரம் 2 மணிக்குதான் தொடங்கியது. அரியலூர் செல்ல இரவு 8 மணியை கடந்தது. தாமதம் காரணமாக அதிகாலை 1 மணி என்ற நிலையில் பெரம்பலூரில் திட்டமிட்டபடி பிரச்சாரம் நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டது.

ADVERTISEMENT

மாலை நேரத்தில் பெரம்பலூர் பகுதியில் மக்கள் சந்திப்பில் விஜய் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தது. இதனால் பெரம்பலூர் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அங்கு திரண்டவர்கள் பிரச்சார வாகனத்தை சூழ்ந்து கொண்டதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக விஜய்யின் பிரச்சார வாகனம் மக்கள் சந்திப்பு மேடைக்கு செல்ல முடியவில்லை. நள்ளிரவு 12 மணிக்கு மேல் தான் பெரம்பலூர் நான்கு ரோடு பாலக்கரைப் பகுதிக்கு விஜய் வந்தார். நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் வாகனம் நின்று விட்டது. கூட்டம் காரணமாக பிரச்சாரத்திற்கு அனுமதி பெற்றிருந்த இடத்திற்கு வராமல் பாலக்கரை பகுதியில் இருந்து நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார் விஜய்.

இதனால் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் வானொலி திடல் பகுதியில் கூடியிருந்த ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். விஜய்யை பார்க்கும் ஆவலுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்த நிலையில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
விஜய்யை கண்டித்து போஸ்டர்

இந்நிலையில் இன்று அதிகாலை பெரம்பலூர் நகரின் பல்வேறு பகுதிகளில் விஜய்யைக் கண்டித்துப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில்,”Bro.. Idhu Political Yatra va.. ila unga weekend getaway ah.. Bro.. Arasiyal weekend trip illai.. Full time job Bro!” என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share