ADVERTISEMENT

சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல்.. பாஜக மாவட்ட துணைத் தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்.

Published On:

| By Pandeeswari Gurusamy

BJP

பாஜக அதிகாரப்பூர்வமாக தற்போது வரை வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பே சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 27 தொகுதிகள் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் தஞ்சாவூர் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தஞ்சாவூர் உள்ளிட்ட எந்த தொகுதிக்கும் இதுவரை பாஜக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட துணைத்தலைவர் முரளிதரன் கடந்த 30 ஆம் தேதி சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். கட்சி தலைமை வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பு சுயேசையாக வேட்பு மனுவை தாக்கல் செய்து தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர் தஞ்சாவூர் தொகுதி வேறு எந்த கட்சிக்கும் ஒதுக்க கூடாது. என் ராசிப்படி இன்று நல்ல நாள் அதனால் நான் வேட்புமனுவை தாக்கல் செய்கிறேன் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி கட்சியின் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதாக தெரிவித்துள்ளார். மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share