தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று பாஜக வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதேபோல் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவருடன் ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன்லால் சர்மா, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
அவினாசி தனி தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
சென்னையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருரான தமிழிசை சவுந்தரராஜன் இன்று மயிலாப்பூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இன்று பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
