ADVERTISEMENT

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. அண்ணாமலை போட்டி இல்லை

Published On:

| By Pandeeswari Gurusamy

BJP Candidate List Released

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் 27 தொகுதிகள் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 3) வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பாஜக வேட்பாளர்களின் முழு விபரம்

  • ஆவடி – ராஜசிம்ம மகிந்திரா
  • மயிலாப்பூர் – தமிழிசை சௌந்தரராஜன்
  • தளி – டாக்டர் நாகேஷ் குமார்
  • திருவண்ணாமலை – சி. ஏழுமலை
  • ராசிபுரம் (தனி) – டாக்டர் எஸ்டி பிரேம்குமார்
  • மொடக்குறிச்சி – கிருத்திகா சிவக்குமார்
  • உதகை – போஜ ராஜன்
  • அவினாசி (தனி) – எல். முருகன்
  • திருப்பூர் தெற்கு – தங்கராஜ்
  • கோவை வடக்கு – வானதி சீனிவாசன்
  • திருவாரூர் – கோவி சந்துரு
  • தஞ்சை – எம். முருகானந்தம்
  • கந்தர்வக்கோட்டை – உதயகுமார்
  • புதுக்கோட்டை – ராமச்சந்திரன்
  • அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த்
  • திருப்பத்தூர் – கே.சி. திருமாறன்
  • மானாமதுரை (தனி) – பால கணபதி
  • மதுரை தெற்கு – ராம சீனிவாசன்
  • சாத்தூர் – நயினார் நாகேந்திரன்
  • ராமநாதபுரம் – கே. நாகேந்திரன்
  • திருச்செந்தூர் – கேஆர்எம் ராதாகிருஷ்ணன்
  • வாசுதேவநல்லூர் (தனி) – ஆனந்தன் ஐயாசாமி
  • ராதாபுரம் – பாலகிருஷ்ணன்
  • நாகர்கோயில் – எம்.ஆர். காந்தி
  • கொளச்சல் – டி. சிவக்குமார்‘
  • பத்மநாபபுரம் – பி. ரமேஷ்
  • விளவங்கோடு – எஸ். விஜயதாரணி

முன்னதாக அண்ணாமலை கோவையில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருந்தார். ஆனால் பாஜகவிற்கு கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு வானதி சீனிவாசன் போட்டியிடும் திட்டம் இருந்ததால் அண்ணாமலையை பாஜக தலைமை மொடக்குறிச்சியில் போட்டி போட வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. ஆனால் அண்ணாமலை மொடக்குறிச்சியில் போட்டியிட தயக்கம் காட்டிய நிலையில் தற்போது அவர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share