கோடிகளை ஈட்டிய பார்தி ஏர்டெல் முதலீட்டாளர்கள்: வீழ்ச்சியை சந்தித்த எல்&டி!

Published On:

| By Santhosh Raj Saravanan

Bharti Airtel investors became rich L and T investors suffered losses

கடந்த வாரம் உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஏற்றத்தின் காரணமாக, சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள முதல் 10 நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் சந்தை மூலதனம் (market cap) மொத்தம் ரூ. 1 லட்சம் கோடி அதிகரித்தது. அதே வேளையில், மீதமுள்ள 4 நிறுவனங்களின் சந்தை மூலதனம் மொத்தம் ரூ. 51,394.99 கோடி சரிந்தது. சந்தை மூலதனம் அதிகரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்களின் சொத்து மதிப்பும் அதற்கேற்ப அதிகரிக்கிறது.

முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு

அதேபோல, சந்தை மூலதனம் குறையும் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்களின் சொத்து மதிப்பும் குறைகிறது. எனவே, கடந்த வாரம் bbharti airtel (Bharti Airtel) மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் (Bajaj Finance) ஆகியவற்றில் முதலீடு செய்தவர்களின் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்தது. மறுபுறம், லார்சன் & டூப்ரோ (L&T) மற்றும் ரிலையன்ஸ் (Reliance) நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களின் சொத்து மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டது.

ADVERTISEMENT
கடந்த வாரம் சென்செக்ஸ், நிஃப்டி

கடந்த வாரம் பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 663.44 புள்ளிகள் அல்லது 0.86% உயர்வுடன் நிறைவடைந்தது. அதே வேளையில், என்எஸ்இ (NSE) நிஃப்டி 50 குறியீடு 214.85 புள்ளிகள் (0.89%) உயர்ந்தது. கடந்த வாரம் சந்தை மூலதனத்தில் ஏற்றம் கண்ட நிறுவனங்களில் பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank), எல்ஐசி (LIC), எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் (Hindustan Unilever) ஆகியவை அடங்கும். மறுபுறம், லார்சன் & டூப்ரோ (L&T), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஆகியவற்றின் சந்தை மூலதனத்தில் சரிவு ஏற்பட்டது.

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மூலதனம்

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல்லின் சந்தை மூலதனம் அதிகபட்சமாக ரூ. 36,529.21 கோடி அதிகரித்து, ரூ. 11,63,877.30 கோடியாக உயர்ந்தது. அதற்கு முந்தைய வாரத்தில் பார்தி ஏர்டெல் மிகப்பெரிய சரிவைச் சந்தித்திருந்தது. ஆனால் அதற்கு முந்தைய வாரத்தில் அதன் சந்தை மூலதனம் ரூ. 52,433 கோடி என்ற அதிகபட்ச உயர்வைப் பதிவு செய்திருந்தது. இது தவிர, பஜாஜ் ஃபைனான்ஸின் மதிப்பீடு ரூ. 33,059.83 கோடி அதிகரித்ததன் மூலம், அதன் சந்தை மூலதனம் ரூ. 6,43,141.36 கோடியாக உயர்ந்தது.

ADVERTISEMENT
மற்ற நிறுவனங்களின் சந்தை மூலதனம்

ஐசிஐசிஐ வங்கி மற்றும் எல்ஐசி (LIC)-யின் மதிப்பீடுகளும் அதிகரித்தன. ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் ரூ.16,084.29 கோடி அதிகரித்து ரூ.10,11,695.03 கோடியாகவும், எல்ஐசி-யின் மதிப்பீடு ரூ.8,601.99 கோடி அதிகரித்து ரூ.5,44,139.55 கோடியாகவும் உயர்ந்தது. எச்டிஎஃப்சி (HDFC) வங்கியின் சந்தை மூலதனம் ரூ.7,664.89 கோடி அதிகரித்து ரூ.12,33,646.33 கோடியாகவும், ஹிந்துஸ்தான் யூனிலீவரின் சந்தை மதிப்பு ரூ.6,461.38 கோடி அதிகரித்து ரூ.5,17,086.30 கோடியாகவும் உயர்ந்தது.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share