கோடைக் காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

Published On:

| By Santhosh Raj Saravanan

Benefits of drinking sugarcane juice in summer

கோடைக் காலத்தில் கரும்புச் சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள், அதில் உள்ள சத்துக்கள் குறித்துப் பார்க்கலாம்.

கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், பல இடங்களில் கோடை வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தி வருகிறது. கோடை வெயிலை தணிக்க மக்கள் பலரும் ஜூஸ் கடைகள், பழக் கடைகளில் ஒதுங்குகிறார்கள். கோடைக்காலமான தற்சமயம் கரும்பு ஜூஸ், வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணி பழத்தின் நுகர்வு மக்களிடம் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக கோடைக் காலத்தில் கரும்புச்சாறு குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதம் போன்றது. இது பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கையான பானம். கரும்புச்சாறு சோர்வைப் போக்குவதோடு உடலுக்கு உடனடியாகப் புத்துணர்ச்சியை அளிக்கிறது. கரும்புச்சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அதன் ஊட்டச்சத்துக்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

கரும்புச் சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கரும்புச் சாறில், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது எலக்ட்ரோலைட்டுகளை அதிகரிக்கவும், நச்சுக்களை நீக்கவும் (Nutrients in sugarcane juice) உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது. கரும்பு சாறில் கார்போஹைட்ரேட்டுகள், இரும்புச்சத்து, வைட்டமின் சி, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின்கள் பி1, பி2 மற்றும் பி9, ஆற்றல் மற்றும் துத்தநாகம் ஆகியவை அடங்கியுள்ளன.

ADVERTISEMENT
கரும்புச்சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

கோடைக் காலத்தில் கரும்புச்சாறு குடிப்பது உடலுக்கு மிகுந்த ஆற்றலை அளித்து, சோர்வைப் போக்குகிறது. இது உடலுக்குப் புத்துணர்ச்சி (benefits of sugarcane juice) அளித்து, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, ஆரோக்கியமான செரிமான அமைப்பைப் பராமரிக்கிறது. மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்குக் கரும்புச்சாறு அருந்துவது குறிப்பாக நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.கரும்புச் சாறு உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும் ஒரு இயற்கையான நச்சு நீக்கும் பானமாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு காரத்தன்மை வாய்ந்த பானமாகும்.

கல்லீரல் செயல்பாட்டை வலுப்படுத்துகிறது

கரும்புச் சாறு சிறுநீர்ப் பெருக்கியாகவும், குளிர்ச்சியூட்டுவதாகவும், மலமிளக்கியாகவும், உடலுக்கு வலுவூட்டவும் உதவி புரிகிறது. சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், சிறுநீர் அடங்காமை மற்றும் ரத்தப்போக்கு ஆகியவற்றிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. கரும்புச் சாறில் உள்ள காரத்தன்மை வயிற்றில் உள்ள அதிகப்படியான பித்தநீர் மற்றும் அமிலங்களை நடுநிலையாக்கி கல்லீரல் செயல்பாட்டை (improve liver health) வலுப்படுத்துகிறது.அதில் உள்ள மெக்னீசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.

ADVERTISEMENT
கரும்புச் சாறு அருந்துவதற்கான சரியான வழிமுறை

கலப்படமற்ற கரும்புச் சாற்றை மட்டுமே அருந்த வேண்டும். நீங்கள் சாலையோரக் கடைகளில் கரும்புச் சாற்றை அருந்தினால், அங்கே ஈக்கள் மொய்க்காமல் இருப்பதையும், தூய்மை பேணப்படுவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சந்தையில் கிடைக்கும் கலப்படம் செய்யப்பட்ட (warn diabetic patient) கரும்புச் சாற்றை அருந்துவதைத் தவிர்க்கவும். இன்னும் கூடுதலான பலன்களைப் பெற, நீங்கள் கரும்புச் சாற்றுடன் எலுமிச்சை அல்லது இஞ்சிச் சாற்றையும் கலந்து அருந்தலாம். இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share