தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் சேலம் – ஆத்தூர் தனி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)
ஆத்தூர் (சேலம்) வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில், 2021 அதிமுக வெற்றி பெற்றது. தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஜெயசங்கரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சின்னதுரையை 8,257 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளராக மீண்டும் ஜெயசங்கரன் போட்டியிடுகிறார். ஆத்தூர் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி வேட்பாளராக அர்த்தநாரி களமிறங்கிறார். இவரும் தேர்தல் களத்துக்கு புதியவர் அல்ல. 2011, 2016 தேர்தல்களில் போட்டியிட்டவர்தான்.
தவெக சார்பில் செல்வபாரதி, நாதக சார்பில் மோனிஷா சின்னதுரை போட்டியிடுகின்றனர்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக கூட்டணி- 36%
அதிமுக கூட்டணி -39%
தவெக-18%
நாதக-6% வாக்குகள் பெறும்
யார் வெற்றி தோல்வி என சொல்லமுடியாத அளவுக்கு போட்டியிருக்கிறது. எனினும் காங்கிரஸ் வேட்பாளர் அர்த்த்நாரி வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக கள நிலவரம் கூறுகிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
