ஆத்தூர் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

Athoor Dindugal Constituency Pre-Poll Survey 2026

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)

ADVERTISEMENT

ஆத்தூர் (திண்டுக்கல்) வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

ஆத்தூர்.. இது திமுகவின் இன்னொரு கோட்டை. மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமியின் தொகுதி. கடந்த 2021 தேர்தலில் தமிழ்நாட்டிலேயே மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில், அதாவது 1,35,571 வாக்குகள் வித்தியாசத்தில் ஐ.பெரியசாமி வெற்றி பெற்றார்.

1989, 2006, 2011, 2016, 2021 என தொடர்ந்து ஐ.பெரியசாமி வெற்றி பெற்று வருகிறார்.

2016-ல் இந்த தொகுதியில ஐ.பெரியசாமிக்கு எதிராக அதிமுகவின் சீனியரான நத்தம் விஸ்வநாதனை ஜெயலலிதா நிறுத்தினார். ஆனாலும் ஐ.பெரியசாமியை தோற்கடிக்க முடியவில்லை.

2021 தேர்தலில் ஐ.பெரியசாமியை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் தோல்வி அடைந்தார்.

இந்த முறை ஐ.பெரியசாமியை எதிர்த்து அதிமுகவின் ஏ. விஸ்வநாதன் போட்டியிடுகிறார்.

தவெக சார்பில் கலை செல்வி, நாதக சார்பில் சைமன் ஐஸ்டின் ஆகியோர் களம் காண்கின்றனர்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக-49%
அதிமுக-29%
தவெக-13%
நாதக-8% வாக்குகள் பெறும்

ஐ.பெரியசாமி மாஸ் லீடிங்கில் இருக்கிறார். மீண்டும் அவர் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? கள்ளக்குறிச்சி | kallakurichi | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share