வெயில் காலம் மெல்லத் தொடங்கிவிட்ட நிலையில், வார இறுதி நாட்களில் வெளியில் செல்வதை விட, ஏசியைப் போட்டுக்கொண்டு நிம்மதியாக ஒரு படம் பார்ப்பது பலரது விருப்பமாக இருக்கிறது. ரசிகர்களின் இந்த மனநிலையைப் புரிந்து கொண்டதோ என்னவோ, இந்த ஏப்ரல் முதல் வாரம் OTT ரசிகர்களுக்கு ஒரு full-on content treat ஆக இருக்கிறது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு மட்டுமல்ல… கொரியன், ஹாலிவுட், international series வரை பல்வேறு மொழிகளில் புதுப் புதுப் ரிலீஸ்கள் காத்திருக்கின்றன.
இந்த வாரம் family drama முதல் crime thriller வரை எல்லா mood-க்கும் ஏதாவது ஒன்று இருக்கிறது.
அமீர் கான் மீண்டும் OTT-யில்… உணர்ச்சி கலந்த ஸ்போர்ட்ஸ் டிராமா
Aamir Khan நடிப்பில் வரும் Sitaare Zameen Par (SonyLIV – ஏப்ரல் 3) இந்த வாரத்தின் முக்கிய ரிலீஸ்களில் ஒன்று. ஒரு basketball coach, neurodivergent குழந்தைகளை train பண்ணும் கதை — emotional + inspirational feel கொடுக்கக்கூடிய படம்.
Genelia D’Souza இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
Courtroom-ல காமெடி மீண்டும்… Maamla Legal Hai திரும்புகிறது
Maamla Legal Hai Season 2 (Netflix – ஏப்ரல் 3) மீண்டும் வருகிறது. Ravi Kishan நடித்த VD Tyagi character, quirky courtroom humor-க்காகவே பிரபலமானது.
இந்த சீசனும் அதே மாதிரி light-hearted comedy + social satire mix ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Crime, Thriller, Dark Stories – காத்திருக்கும் ரசிகர்களுக்கு
Vadh 2 (Netflix / Prime Video – ஏப்ரல் 1/3) — Sanjay Mishra மற்றும் Neena Gupta நடிப்பில் வரும் gritty crime thriller sequel.
Maa Ka Sum (Amazon Prime Video – ஏப்ரல் 3) — Mona Singh நடிக்கும் இந்த படம், ஒரு math genius தனது அம்மாவுக்கு life partner தேட algorithm use பண்ணுற unique concept.
Happy Patel: Khatarnak Jasoos (Netflix – ஏப்ரல் 1) — Vir Das இயக்கி நடித்த spy comedy.
Sitcom ரசிகர்களுக்கு ஒரு special spin-off
Bhabiji Ghar Par Hain: Fun on the Run (ZEE5 – ஏப்ரல் 3) — popular TV show-வின் spin-off. Uttarakhand trip-ல் நடக்கும் chaos தான் கதையின் highlight.
International series… binge-watch lovers-க்கு heaven
XO, Kitty Season 3 (Netflix – ஏப்ரல் 2) — teenage romance fans காத்திருந்த sequel.
Bloodhounds Season 2 (Netflix – ஏப்ரல் 3) — Korean action drama, underground boxing உலகத்துடன் இன்னும் intense ஆக திரும்புகிறது.
Your Friends & Neighbors Season 2 (Apple TV+ – ஏப்ரல் 3) — Jon Hamm நடித்த dark comedy thriller.
Horror & Suspense ரசிகர்களுக்கான picks
Five Nights at Freddy’s 2 (JioHotstar / Prime Video – ஏப்ரல் 5) — horror sequel, Freddy-யின் dark past explore பண்ணும் கதை.
South audience-க்கு இரண்டு முக்கிய ரிலீஸ்கள்
Mrithyunjay (Netflix – ஏப்ரல் 3) — Sree Vishnu நடித்த investigative thriller.
Vadam (Sun NXT – ஏப்ரல் 3) — ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவான ஒரு கிராமத்து தமிழ் கதை.
இந்த வாரம் OTT என்ன சொல்லுது?
இந்த வாரம் OTT platforms சொல்ல வருவது ஒன்றே — “எந்த mood-ல இருந்தாலும், உங்களுக்கு content ready.”
Family-ஆ உட்கார்ந்து பார்க்க வேண்டுமா?
Thriller வேணுமா?
Comedy-ஆ relax ஆகணுமா?
அல்லது binge-watch செய்ய series தேடுறீங்களா?
இந்த வாரம் — எல்லாத்துக்கும் answer இருக்கு.
