FCRA சட்ட திருத்தங்களை கொண்டு வந்தது காங்கிரஸ்தான் – முதல்வருக்கு அண்ணாமலை பதில்

Published On:

| By Pandeeswari Gurusamy

FCRA சட்ட திருத்தங்களை காங்கிரஸ்தான் கொண்டு வந்தது, அதன் பின் சிறு சிறு திருத்தங்களை பா.ஜ.க கொண்டு வந்தது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் , தனியார் ஹோட்டலில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தினமும் முதல்வர், உதயநிதி ஆகியோர் ஏதாவது பேசி கொண்டு இருக்கின்றனர் , அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக தினமும் விளக்கம் அளிக்கப்படும் என்றார்.

ADVERTISEMENT

பின்னர் முதல்வர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கின்றது. FCRA தொடர்பாக தவறான தகவல்களை சொல்கின்றனர். FCRA சட்ட திருத்தங்களை காங்கிரஸ்தான் கொண்டு வந்தது, அதன் பின் சிறு சிறு திருத்தங்களை பா.ஜ.க கொண்டு வந்தது. இது சிறுபான்மையினருக்கு எதிரானது என முதல்வர் சொல்கின்றார்.

மேலும் மெட்ரோ திட்டத்தில் மதுரை,கோவைக்கு எதுவும் செய்ய வில்லை என முதல்வரின் கேள்விக்கு, ” தமிழக அரசு Detailed project report யை திருத்தி கொடுத்தீர்களா இல்லையா ? மாநில அரசு இது வரை அந்த ரிப்போட்டை திருப்பி, திருத்தி கொடுக்க வில்லை” என தெரிவித்தார்.

ADVERTISEMENT

கேந்திரியா வித்யாலயா பள்ளியில தமிழ் சொல்லிதர ஆசிரியர் இல்லை என சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றது என தெரிவித்த அவர்,
“46 கேந்திரியா வித்யாலாவில் 40 பள்ளிகளில் தமிழ் மூலமாக படிக்க முடியும். தவறான செய்தியை வேண்டும் என்றே போடுவது தவறானது. இந்த செய்திகளை வெளியிட்ட சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 18 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என தெரிவித்த அவர், செந்தில்பாலாஜி தொகுதியில், போட்டியிடும் வேட்பாளர்கள் சுயேட்சையாக இலவசங்களை கொடுக்க முயல்கின்றனர், இவர்களை கண்காணிக்க வேண்டும். ஓரே ஊர் காரர்கள் 18 பேர் நிற்பதை கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

ADVERTISEMENT

மேலும் தேர்தலில் போட்டியிடாதது குறித்து பேசுகையில்,” நான் சீட்டு கேட்கவில்லை, சந்தேகமாக இருந்தால் எங்களது தலைவர்களிடம் கேட்டுப்பாருங்கள் ” என்றார்.

சட்டமன்ற தேர்தலில் கடைசி 10 நாள்களில் இரு முனை போட்டியாக மாறிவிடும், மக்கள் யாருக்கு ஓட்டு போடுவது என முடிவு செய்து விடுவார்கள் என தெரிவித்த அவர், களம் மாற ஆரம்பித்து விட்டது என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share