தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)
அம்பத்தூர் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

அம்பத்தூர் தொகுதி தொழிற்பேட்டை, தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும்.
2011, 2016-ல் அதிமுகவும் 2021-ல் திமுகவும் வென்ற தொகுதி. 2021 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜோசப் சாமுவேல், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அலெக்சாண்டரை 42,146 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்த முறை திமுக வேட்பாளராக பூர்ணிமா, அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக கே.என்.சேகர் போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளர் பூர்ணிமா புதுமுகம். பாமக கே.என்.சேகர், அம்பத்தூர் முன்னாள் நகர் மன்ற தலைவர். பாமகவில் துணை பொதுச்செயலாளராக இருந்தவர்.
அதிமுகவில் முன்னாள் எம்.எல்.ஏ. (2016) அலெக்ஸாண்டருக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்கிற அதிருப்தி இருக்கிறது.
தவெக சார்பில் பாலமுருகன், நாதக சார்பில் ஆதித்தன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக-38%
அதிமுக-29%
தவெக-24%
நாதக-8% வாக்குகள் பெறும்
திமுக நல்ல லீடிங்கில் முன்னிலை வகிக்கிறது. திமுக வேட்பாளர் பூர்ணிமா வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
