அம்பாசமுத்திரம் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)

ADVERTISEMENT

 அம்பாசமுத்திரம் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

நமது சர்வே முடிவுபடி, 

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அக்கட்சி வேட்பாளராக விபி துரை களம் இறங்குகிறார்.

 முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனுக்கு சீட் கிடைக்காததால் அவர் வருத்தத்தில் இருக்கிறார். அம்பாசமுத்திரத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று விட்டால் இந்த தொகுதி அவர்களிடமே சென்றுவிடும் என இவர் தரப்பினர் நினைக்கிறார்கள். இதனால் திமுக தலைமை என்ன செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

2021 தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆவுடையப்பனை 16,915 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 

இந்த தேர்தலில் அதிமுக சார்பில் இசக்கி சுப்பையா மீண்டும் களமிறங்குகிறார். அவரது சமூகத்தில் ரொம்ப செல்வாக்கு மிக்கவர். பண பலமும் அதிகமாக இருக்கிறது. 

காங்கிரஸ் வேட்பாளர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். அதனால் இங்கு கடும் போட்டி நிலவுகிறது. மற்ற சாதியைச் சேர்ந்த மக்கள் எல்லாருமே நாடாரை ஆதரிக்க கூடிய அளவுக்கு இங்கு கள நிலவரம் இருக்கிறது. 

அம்பாசமுத்திரத்தில் சசிகலா அறிவித்திருக்கும் வேட்பாளர் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர். 

இந்தத் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் எஸ் ராஜகோபால், நாம் தமிழர் கட்சி சார்பில் சிவசங்கரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திமுக-35%
அதிமுக-38%
தவெக-19%
நாதக-7% வாக்குகள் பெறும்

மீண்டும் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? திருநெல்வேலி | Tirunelveli | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share