தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)
ஆலங்குளம் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 – நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியனுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலில் மனோஜ் பாண்டியன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாவை 3,539 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கடந்த தேர்தலில் ஹரி நாடாரும் போட்டி போட்டு ஓட்டுக்களை பிரித்திருந்தார்.
இந்த முறையும் ஹரி நாடார் மற்றும் ராக்கெட் ராஜா இருவரும் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இவர்களது மனு நிராகரிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கே ஆர்பி பிரபாகரன் போட்டியிடுகிறார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விபின் சக்கரவர்த்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் பால்ராஜ் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
திமுகவில் அதிருப்தி வேட்பாளராக மனோஜ் பாண்டியன் களமிறங்கியும் அவருக்கு ஆதரவாக பிரச்சாரங்கள் செய்கிறார்கள். இன்னொரு பக்கம் தவெக வேட்பாளர் விபின் சக்கரவர்த்தி களத்தில் இறங்கி செலவு செய்யவும் ஆரம்பித்திருக்கிறார். இதனால் மனோஜ் பாண்டியனுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.
நமது சர்வே முடிவுபடி,
திமுக-38%
அதிமுக-35%
தவெக-18%
நாதக-8% வாக்குகள் பெறும்
திமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் கடும் போட்டிக்கு மத்தியில் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
