ஆலந்தூர் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

Alandur Constituency Pre-Poll Survey 2026

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)

ADVERTISEMENT

 ஆலந்தூர் வாக்காளர்கள்

Alandur Constituency Pre-Poll Survey 2026

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

Alandur Constituency Pre-Poll Survey 2026
Alandur Constituency Pre-Poll Survey 2026
Alandur Constituency Pre-Poll Survey 2026

சாதி வாரியான வாக்காளர்கள்

Alandur Constituency Pre-Poll Survey 2026

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

Alandur Constituency Pre-Poll Survey 2026

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

Alandur Constituency Pre-Poll Survey 2026

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

Alandur Constituency Pre-Poll Survey 2026

ஆலந்தூர் தொகுதி (அப்போது பரங்கிமலை தொகுதி) 1967-ல் எம்ஜிஆர் துப்பாக்கி குண்டடிபட்ட நிலையில் வென்ற தொகுதி.

1971-ல் எம்ஜிஆர் வென்றார். அதிமுகவில் ஆர்எம் வீரப்பன் இங்கே போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.

2001-ல் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி வென்றார். 2011-ல் தேமுதிகவில் பண்ருட்டி ராமச்சந்திரன் வென்ற தொகுதி.

2016ல் திமுக சார்பில் போட்டியிட்ட தா.மோ.அன்பரசன் அதிமுக சார்பில் போட்டியிட்ட பண்ருட்டி ராமச்சந்திரனை தோற்கடித்தார்.

2021 தேர்தலில் தா.மோ.அன்பரசன் 40,571 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வளர்மதியை தோற்கடித்தார்.

2026 தேர்தலில் மீண்டும் திமுக வேட்பாளராக அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலந்தூர் தொகுதியில் களம் காண்கிறார். அதிமுக சார்பில் சரவணன், தவெக சார்பில் ஹரீஷ், நாதக சார்பில் மகாலட்சுமி ஆகியோர் களம் காண்கின்றனர்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக-43%
அதிமுக-28%
தவெக-22%
நாதக-7% வாக்குகள் பெறும்

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தா.மோ.அன்பரசன் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? ஸ்ரீபெரும்புதூர் | Sriperumbudur | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share