அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ஃபர்ஸ்ட் லுக் எப்படி?

Published On:

| By Kavi

Ajith Good Bad Ugly

அஜித்குமார் நடிக்கும் 63வது படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு நேற்று (மே 20) மாலை 6 மணிக்கு வெளியிட்டுள்ளது.

விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றியின் மூலம் நம்பிக்கைக்குரிய இயக்குநராக மாறிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

2025 பொங்கல் அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் குட் பேட் அக்லி படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைக்கிறார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் தயாராகி வந்த விடாமுயற்சி படத்தின் தகவல்களை தொடர்ச்சியாக கேட்டு வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

படப்பிடிப்பும் உடனடியாக தொடங்கப்பட்டது. அதே வேகத்தில் படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர்.

முதல் தோற்றம் எப்படி?

படத்தின் பெயருக்கு ஏற்றபடி முதல் தோற்றம் இருப்பதாக அஜித்குமார் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ள மேசை ஒன்றில் கை வைத்து நிற்கிறார் அஜித் குமார். பச்சை நிறத்திலான சட்டை அணிந்துள்ளார். கைகள் முழுவதும் பச்சை குத்தப்பட்டுள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் அஜித்குமார் முடியலங்காரம் இருக்கிறது.

இடப்பக்கம் உள்ள அஜித் குமார் கெட்டவன் போலவும், வலப்பக்கம் உள்ள அஜித் குமார் அக்லியாகவும் செய்கை செய்கின்றனர். அதாவது நல்லவன், கெட்டவன் மற்றும் அக்லி என மூன்றையும் பிரதிபலிக்கும் வகையில் முதல் தோற்ற வெளியீடு உள்ளது.

அஜித்குமார் நடிப்பில் வெளியான வில்லன், வரலாறு திரைப்படங்களில் அஜீத்குமார் நடித்த கதாபாத்திரங்களை இந்த முதல் தோற்றங்கள் நினைவு படுத்துகிறது.

Ajith Good Bad Ugly

“இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஃபேன் பாயாக மட்டுமல்லாமல், ஃபேன் பாய் இயக்குநராகவும் தருகிறேன். யுனிவர்ஸுக்கும், கடவுளுக்கும் நன்றி” என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது X தளத்தில் தன்னை ஒரு அஜீத்குமார் ரசிகராக முன்னிலைப்படுத்தி பதிவிட்டுள்ளார்.

தான் நடித்து வந்த விடாமுயற்சி படப்பிடிப்பை முடிக்காமல் அடுத்த படத்திற்கு நடிக்க சென்று விட்டார் இதற்கு காரணம் அஜீத்குமார் சம்பள பாக்கி, படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தலைகா நிறுவனத்திடம் நிதியாதாரம் இல்லை எனக் கூறப்பட்டு வந்தது.

அஜித்குமாரால் சிபாரிசு செய்யப்பட்டவர் படத்தின் இயக்குநர் மகிழ்திருமேனி. அவர் கொடுத்த பட்ஜெட், குறிப்பிட்ட நாட்களுக்குள் படப்பிடிப்பை முடிக்கவில்லை. இதனால் படத்தயாரிப்பு செலவு கூடுதலாகியுள்ளது.

அஜீத்குமார் படத்திற்கு இருக்கும் அதிகபட்ச வியாபாரத்தை கடந்து படத்தின் பட்ஜெட் எகிறியதால் அவரது சம்பளத்தை குறைத்துக் கொள்ள கேட்டோம்.

அதற்கு அஜித்குமார் தரப்பில் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் இந்தியன் -2 பட வெளியீட்டுவேலைகளில் லைகா தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்கின்றனர் லைகா வட்டாரத்தில் விடாமுயற்சி படத்தின் தகவலை கேட்கும் ரசிகர்கள் கவனத்தை திசைதிருப்பவே குட்பேட் அக்லி படத்தின் தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன என்கின்றனர் லைகா தரப்பில்.

-இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Share market: இன்று விடுமுறை… இந்த வாரத்துக்கான பங்குகள் என்னென்ன?

வேலைவாய்ப்பு: மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் பணி!

ஹெல்த் டிப்ஸ்: ஓய்வில்லாமல் உழைப்பவரா நீங்கள்? வெயிட் ப்ளீஸ்!

உதகை ரோஜா கண்காட்சி மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share