கடந்த இரண்டு தினங்களாக கருப்பு சட்டையில் வந்த அதிமுகவினர், இன்று (ஜனவரி 10) வெள்ளை உடையில் சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை வாசிக்காமல் ஆளுநர் புறப்பட்டுச் சென்றார்.
அப்போது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக ‘யார் அந்த சார்?’ பதாகையுடன் பேரவைக்குள் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து இரண்டாம் நாளில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் வாசிக்கப்பட்டு, மறைந்த உறுப்பினர்களுக்கு அவை உறுப்பினர்கள் அனைவரும் மரியாதை செலுத்தினர்.
மூன்றாம் நாளான 8ஆம் தேதி கருப்பு சட்டையில் ‘யார் அந்த சார்?’ பேட்ஜ் அணிந்தபடி வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள், பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
நான்காம் நாளான நேற்று கருப்பு சட்டையுடன் ‘டங்ஸ்டனை தடுப்போம்’, ’மேலூரை காப்போம்’ என வாசகம் பொறித்த மாஸ்க் அணிந்து அதிமுக உறுப்பினர்கள் வந்தனர். விதிமீறல் தொடர்பாக தங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வெளி நடப்பு செய்தனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவைக்கு வராத எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஐந்தாவது நாளான இன்று ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேச உள்ளார்.
இதனையடுத்து வெள்ளை வேட்டி, சட்டையுடன் அதிமுக உறுப்பினர்கள் இன்று அவைக்கு வருகை தந்துள்ளனர்.
அதேவேளையில் அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக பிரமுகரின் புகைப்படம் பொறித்த ’இவர் தான் அந்த சார்’ என்ற பதாகையுடன் திமுக எம்.எல்.ஏக்கள் இன்று சட்டமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
காற்றில் கலந்த இசை: ’ஏழைகளின் ஜேசுதாஸ்’ ஜெயச்சந்திரன் மறைவால் கலங்கும் பிரபலங்கள்!
”சில மண்ணாந்தைகளுக்கு இது புரியாது” : சீமானை விளாசிய துரைமுருகன்
அமைச்சர் மா.சு. மீதான வழக்கில் இன்று தீர்ப்பு: ஹெச்.ராஜாவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி