ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு நிறுத்தி வைப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

TVK Aadhav Arjuna

தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலினை இன்று (ஏப்ரல் 7) தொடங்கி உள்ள நிலையில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா அக்கட்சி சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார். தனது வேட்புமனுவை மார்ச் 30, 2026 அன்று தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று நடந்த வேட்புமனு பரிசீலனையின் போது ஆதவ் அர்ஜூனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜூனாவின் மனைவி பெயரில் உள்ள சில நிறுவனங்களின் பெயர்கள் குறிப்பிடவில்லை என்று கூறி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சுயேட்சை வேட்பாளர் முரளி வினோத் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share