சென்னை மாநகராட்சி சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. திருவல்லிக்கேணியில் மாடு முட்டி ஒரு முதியவர் உயிரிழந்தது குறிப்பிடத் தக்கது.
இந்த நிலையில் இன்று (ஜூன் 24) கூடிய சென்னை மாமன்றக் கூட்டத்தில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கும் கூடுதலாக 5 பணியாளர்கள் நியமனம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் , “தினக்கூலி அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.687 ஊதியமாக வழங்கப்படும். பணியாளர் ஒருவருக்கு மாதம் ரூ.20,610 ஊதியமாக வழங்கப்படும்.
அம்மா உணவக தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ.25 ஊதிய உயர்வு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ரூ.300ஆக இருந்த தினக்கூலி பணியாளர்களின் ஊதியம் ரூ.325 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.” எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மன்றத்தில், நாய்க்கடி பிரச்சனை தொடர்பாக கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் பிரியா, “சென்னையில் நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
நாய் வளர்ப்பு விஷயத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர அரசிடம் சென்னை மாநகராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என கூறினார்.
மேலும் பேசிய மேயர் பிரியா, “சென்னை மாநகராட்சியில் கால்வாய், மழைநீர் வடிகாலை ஆண்டு முழுவதும் தூர்வார முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் மழைநீர் வடிகால்களைத் தூர்வார முதற்கட்டமாக வார்டு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் ஒப்பந்தந்தாரர்களுக்கு பதில் மாநகராட்சியே மழைநீர் வடிகால்களைத் தூர்வார ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது” எனவும் விளக்கம் அளித்தார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வன்னியர் இடஒதுக்கீடு: விளக்கமளித்த ஸ்டாலின்.. வெளிநடப்பு செய்த பாமக!
கள்ளச்சாராய மரணத்தை திசை திருப்பவே சிபிஐ விசாரணை: ஆர்.எஸ்.பாரதி காட்டம்!