சட்டசபையில் இன்று (ஜூன் 22) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக்கோரிக்கை நடைபெற்றது.
மானியக்கோரிக்கையின் போது புதிய அறிவிப்புகளை வெளியிட்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,
“கடலூர், தாம்பரம், திண்டுக்கல், கரூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளிலும், ராஜபாளையம், திருவள்ளூர், சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட 35 நகராட்சிகளிலும் ரூ.145.82 கோடியில் புதிய வணிக வளாகங்கள் அமைக்கப்படும்.
மாணக்கர்களுக்கான 50 அறிவியல் பூங்காக்கள் ரூ.30.50 கோடியில் அமைக்கப்படும்.
தஞ்சாவூர், திருச்சி மாநகராட்சிகள் மற்றும் திருச்செந்தூர், ஜெயங்கொண்டம், செங்கல்பட்டு, நந்திவரம், கூடுவாஞ்சேரி, மயிலாடுதுறை, மன்னார்குடி, தேனி, கொடைக்கானல், உதகமண்டலம், கூத்தாநல்லூர் ஆகிய நகராட்சிகளில் ரூ.346.80 கோடி மதிப்பீட்டில் புதிய சந்தைகள் அமைக்கப்படும்.
ரூ.55.70 கோடி மதிப்பீட்டில், திருச்சி மாநகராட்சி மற்றும் திருவண்ணாமலை நகராட்சியிலுள்ள பழைய தேக்கத் திடக்கழிவுகளை பயோமைனிங் முறையில் அகற்றி நிலம் மீட்டெடுக்கப்படும்.
ரூ.285.73 கோடியில், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 418.57 கி.மீ. நீள மண் சாலைகள், தார்சாலை, கான்கிரீட் அல்லது பேவர் பிளாக் சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.
ரூ.987.19 கோடியில், 2016.41 கி.மீ. நீளத்திற்கு சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மெட்ரோ 2-ம் கட்ட பணி: நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு கோரிக்கை!
இந்திய அணிக்கு கடவுள் கொடுத்த பரிசு இவர்… அம்பத்தி ராயுடு புகழ்ந்த வீரர் யார் தெரியுமா?