மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை? கார்கேவை சந்திக்கும் செல்வப்பெருந்தகை

Published On:

| By Pandeeswari Gurusamy

Selvam Manickam Tagore

திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது; சர்ச்சையாக பேசும் மாணிக்கம் தாகூர் குறித்து காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கேவை பெங்களூருவில் சந்திக்க இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இப்ப பெங்களூருல இருக்காரு. அவர்கூட தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் பத்தி ஆலோசிக்கிறதுக்காக நான் அங்க போறேன்.

ADVERTISEMENT

கூட்டணி விஷயத்துல யாரும் பொதுவெளியில பேசக்கூடாதுன்னு ராகுல் காந்தி, கார்கே, வேணுகோபால்னு எல்லா தலைவர்களும் தெளிவா சொல்லிட்டாங்க. அதை மீறி யாரும் பேசக்கூடாது.

மதுரையில மாணிக்கம் தாகூர் கலந்துகிட்ட கூட்டத்துல போட்ட தீர்மானம் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை என்ன சொல்லுதோ, அதைக் கேட்டு நடக்குறவன்தான் இந்த செல்வப்பெருந்தகை.

ADVERTISEMENT

கிரிஷ் சோடங்கர் தலைமையில 5 பேர் கொண்ட கமிட்டி இதைப் பத்தி விசாரிச்சிட்டு இருக்காங்க. கட்சி வழிகாட்டுதலுக்கு எதிரா யார் நடந்தாலும் அது தப்புதான். இது பத்தி தலைமையில ஆலோசிச்சு முடிவு எடுப்போம்.

மாணிக்கம் தாகூர் பேசியது குறித்து தலைமை என்னை அழைத்து பேசியிருக்கிறது, அது பற்றி ஆலோசிக்கத்தான் நான் இப்போது போகிறேன். ஜனநாயகத்திற்கு முரணாகவும், அகில இந்திய காங்கிரஸின் வழிகாட்டுதலுக்கு எதிராகவும் யார் நடந்துகொண்டாலும் அது தவறுதான். இவ்வளவு காலம் பேசாமல் இருந்துவிட்டு, இப்போது தேர்தல் நேரத்தில் ஏன் இப்படிச் சர்ச்சையாகப் பேச வேண்டும்? இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share