Aadujeevitham: ஓடிடி ரிலீஸ் எப்போது?

Published On:

| By Manjula

பிரித்விராஜ் சுகுமாரன் – அமலாபால் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் படத்தின் ஓடிடி விவரங்கள் தற்போது தெரிய வந்துள்ளன.

கடந்த மார்ச் 28-ம் தேதி பிளஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் ஆடுஜீவிதம் படம் உலகம் எங்கும் வெளியானது.

பிழைப்பு தேடி வெளிநாடு செல்லும் ஒரு இளைஞன் பாலைவனத்தில் ஆடு மேய்த்து படும் துன்பங்களே ஆடுஜீவிதம் படத்தின் கதை.

உருக்கமான திரைக்கதையால் ரசிகர்களைக் கட்டிப்போட்ட இப்படம், தற்போது உலகமெங்கும் சுமார் 15௦ கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

பிரேமலு, மஞ்சும்மேல் பாய்ஸ், பிரேமயுகம், ஆடுஜீவிதம் என இந்தாண்டு மலையாள சினிமாவுலகம் பணமழையில் திளைத்து வருகிறது.

இது மட்டுமின்றி ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியான ஆவேசம், வருஷங்களுக்கு சேஷம் படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்தநிலையில் ஆடுஜீவிதம் படத்தின் ஓடிடி குறித்த விவரங்கள் தற்போது தெரிய வந்துள்ளன. அந்த வகையில் வருகின்ற மே மாதம் 1௦-ம் தேதி ஆடுஜீவிதம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என, தெரிய வந்துள்ளது.

ஆடுஜீவிதம் படத்தை ஹாட்ஸ்டார் நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கி இருக்கிறது. இதுகுறித்த விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும் நல்ல தொகைக்கு தான் விற்பனை ஆகியுள்ளதாக தெரிகிறது.

விரைவில் ஆடுஜீவிதம் ஓடிடி குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வெறுப்பு பேச்சு… மோடிக்கு எதிராக 20,000 புகார்கள்: என்ன செய்கிறது தேர்தல் ஆணையம்?

Aparna Das: களைகட்டிய திருமணம்… தீயாய் பரவும் புகைப்படங்கள்!

Cook With Comali: இவங்க தான் அந்த ‘நியூ’ கோமாளிகள்… வீடியோ உள்ளே!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share