ADVERTISEMENT

வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு!

Published On:

| By Pandeeswari Gurusamy

low pressure area bayofbengal

வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை 5.30 மணிக்கு உருவாகி உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு நோக்கி நகர கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வங்க கடலில் வரும் செப்டம்பர் 26ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் மத்திய கிழக்கு அதனை ஒட்டி உள்ள வங்கக்கடலில் வரும் செப்டம்பர் 25ல் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share