சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயிலில் ஒரே பயணச் சீட்டு மூலம் பயணம்- CHENNAI ONE செயலி இன்று அறிமுகம்

Published On:

| By Mathi

Chennai One APp

சென்னையில் பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவற்றில் ஒரே பயணச் சீட்டு மூலம் பயணம் செய்ய CHENNAI ONE செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார்.

சென்னை மாநகரில் மாநகரப் பேருந்துகள், புறகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் ஆகிய பொதுப் போக்குவரத்தில் நாள்தோறும் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கின்றனர். இந்த 3 பொதுப் போக்குவரத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால் இந்த 3 பொதுப் போக்குவரத்திலும் பயணிக்க, பொதுமக்கள் பயணச் சீட்டுகளை எளிதாக பெறும் வகையில் CHENNAI ONE செயலி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த செயலியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார்.

இந்தியாவிலேயே அனைத்து வகை பொதுப் போக்குவரத்தையும் ஒருங்கிணைத்த முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share