போதும் தங்கமே தாங்காது.. அதிரடியாக மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

gold

சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று (செப்டம்பர் 22) ரூ.560 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றத்தை கண்டு வருகிறது. இந்தியா முழுவதும் இன்று முதல் ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இன்று இந்திய பங்கு சந்தை வர்த்தகம் சரிவுடன் தொடங்கி உள்ளது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிந்துள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிஃப்டி 100 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் பக்கம் திரும்பி உள்ளது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.560 வரை அதிரடியாக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று (செப்டம்பர் 22) ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.10,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.560 உயர்ந்து ரூ.82,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று (செப்டம்பர் 22) உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.6 உயர்ந்து ரூ.148க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.148000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share