ஐயப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் 2 தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு! சபரிமலையில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க கோரிக்கை!

Published On:

| By Mathi

Kerala Ayyappa

சபரிமலையில் 5 ஏக்கர் நிலத்தை வழங்க கேரளா மாநில அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

பம்பையில் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்றார்.

ADVERTISEMENT

இந்த சங்கமம் நிகழ்ச்சியில் பேசிய சேகர்பாபு, தமிழ்நாடு- கேரளா எல்லையில் உள்ள கண்ணகி கோவில் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். சபரிமலையில் தமிழ்நாட்டு பக்தர்கள் நலனுக்காக 5 ஏக்கர் நிலத்தை கேரளா மாநில அரசு ஒதுக்கி தர வேண்டும். தமிழ்நாடு- கேரளா இடையேயான உறவு நீடித்து இருக்கும் என்றார்.

ஐயப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சபரிமலை ரயில் பாதை, விமான நிலையம், ரோப் கார் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share