அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு- விலை குறையும், அதிகமாகும் பொருட்கள்!

Published On:

| By Mathi

GST Price List

ஜிஎஸ்டி வரி குறைப்பு நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 22) முதல் அமலுக்கு வந்துவிட்ட நிலையில் எந்தெந்த பொருட்கள் விலை குறையும், அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

2017-ம் ஆண்டு முதல் 5%,12% 18% மற்றும் 28% என ஜிஎஸ்டி வரி விதிப்பு இருந்தது. இது தற்போது 5%, 18% என இரண்டு அடுக்காக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துவிட்டது.

ADVERTISEMENT

பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால்,

ADVERTISEMENT
  • சாக்லேட்டுகள்
  • பாஸ்தா
  • ரெடிமேட் நூடுல்ஸ்
  • பன்னீர்
  • நெய்
  • வெண்ணெய்
  • டிரை ப்ரூட்ஸ்
  • நொறுக்கு தீனி வகைகள்
  • ஏசி
  • பிரிட்ஜ்
  • வாஷிங் மெஷின்
  • கார்கள்

ஆகியவற்றின் விலை குறையும்.

28% ஜிஎஸ்டியில் இருந்து 18%-க்குள் கொண்டு வரப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் விலை 10% அளவுக்கு குறையும்.பெரும்பாலான கார்கள் விலையும் குறையும்.

ADVERTISEMENT

அதே நேரத்தில்

  • மதுபான பொருட்கள்
  • குட்கா
  • பான்மசாலா
  • சிகரெட் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி 40% ஆக உயர்த்தப்பட்டிருப்பதால் இவற்றின் விலையும் மிக மிக கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share