ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்… கூட்ட நெரிசலில் 7 பேர் பலியான சோகம்!

Published On:

| By Selvam

7 feared dead in stampede at RCB victory

ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற ஆர்சிபி வீரர்கள் இன்று (ஜூன் 4) மதியம் பெங்களூரு வந்தடைந்தனர். அவர்களை கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், வரவேற்றார்.

தொடர்ந்து இன்று மாலை கர்நாடகா சட்டமன்ற வளாகத்தில் ஆர்சிபி வீரர்களை அம்மாநில ஆளுநர் தவார் சந்த் கெக்லாட், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் கெளரவிக்க உள்ளனர். இதனையடுத்து பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில், வெற்றி விழா நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இதனையடுத்து சட்டமன்ற வளாகம் மற்றும் சின்னசாமி மைதானத்தின் முன்பாக அதிகளவில் ரசிகர்கள் திரண்டனர். ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதில், இரண்டு பெண்கள் உள்பட ஏழு ரசிகர்கள் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொண்டாட்டத்திற்கு நடுவே ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 7 feared dead in stampede at RCB victory

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share