புதுச்சேரி, அசாம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி மற்றும் திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் முதல்முறையாக களம் காண்பதால் புதுச்சேரியில் மும்முனை போட்டி நிலவுகிறது.
இன்று காலை முதல் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் மதியம் ஒரு மணி வரை 56.83% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தொகுதி வாரியாக
முத்தியால்பேட்டை- 55.85%
நெடுங்காடு- 53.76%
நெல்லித்தோப்பு- 54.52%
நிரவி டி.ஆர் பட்டினம்- 58.14%
நெட்டப்பாக்கம் -56.42%
மாஹே -45.39%
மணவெளி- 54.19%
மங்களம் – 60.57%
மண்ணடிப்பட்டு – 60.94%
முதலியார்பேட்டை -54.63%
காலாப்பட்டு- 57.02%
காமராஜர் நகர் -55.41%
காரைக்கால் வடக்கு -58.08%
காரைக்கால் தெற்கு -53.09%
லாஸ்பேட்டை – 56.59%
அரியாங்குப்பம்- 58.41%
பாகூர் -57.56%
ஏம்பலம் – 62.06%
இந்திரா நகர் – 55.58%
கதிர்காமம் -56.08%
தட்டாஞ்சாவடி -57.25%
திருபுவனை- 62.35%
திருநள்ளாறு – 56.79%
வில்லியனூர் – 59.46%
ஏனாம் – 57.12%
உருளையான்பேட்டை – 57.04%
உப்பளம் – 53.79%
உசுடு – 59.53%
உழவர்கரை – 57.56%
ராஜ்பவன் -56.34%
காலை 9 மணி நிலவரப்படி – 17.41% 11 மணி நிலவரப்படி – 37 சதவிகித வாக்குகளும் பதிவாகியிருந்தன.
தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்படுவதாகவும், மீண்டும் 4 மணிக்கு மேல் விறுவிறுப்படையும் என்றும் தகவல்கள் வருகின்றன.
2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது மொத்தமாக 83.42 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
