VIDEO : மினி லாரியை தூக்கி வீசிய காட்டு யானை… அலறி ஓடிய மக்கள்!

Published On:

| By Minnambalam Desk

3 Wild elephants rampage in Kerala video viral

நீலகிரி மாவட்டம் கூடலூர் தமிழக எல்லையை ஒட்டி கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் நிலம்பூர் பகுதி உள்ளது. இங்கு கருவார குண்டு பகுதியில் சில தினங்களுக்கு முன் 3 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. 3 Wild elephants rampage in Kerala video viral

இதைத்தொடர்ந்து 3 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

இதையடுத்து 3 யானைகளும் சாலையில் ஓட தொடங்கின. அதில் ஒரு யானை எதிரே வந்த மினி லாரி வாகனத்தை ஆக்ரோஷமாக தாக்கியது. இதில் வாகனம் லேசாக சேதம் அடைந்தது.

ADVERTISEMENT

பின்னர் 3 யானைகளும் அருகில் இருந்த தோட்டத்திற்குள் சென்றன. அதிர்ஷ்டவசமாக மினி லாரியில் இருந்த வாகன ஓட்டுனர் உயிர் தப்பினார். இந்த நிலையில் யானைகள் மினி லாரியை தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share