வெற்றியைத் தடுத்தது அம்மாதான்! – அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலைவழக்கில் கைதாகி சிறையிலிருந்த யுவராஜ், ஜாமீனில் விடுதலையாகி வந்தவுடன் அவருக்குக் கிடைத்த மீடியா ரெஸ்பான்ஸ் சோசியல் மீடியாவில் கடும் கடுப்புகளை கிளப்பிவிட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அவரின் முகநூல் பக்கத்திலும் கல்லூரியில் படித்ததாகக் குறிப்பிட்டிருக்கும் யுவராஜ் பொலிடீஷியன் என்ற வார்த்தையை தவறாக ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் எழுதியிருந்ததை வட்டமிட்டு ஓட்டிக்கொண்டு இருந்தனர். தனியார் பால் விலைஉயர்வு குறித்து நிக்கோலஸ் எழுதியுள்ள நிலைத்தகவலும் இன்றைய அப்டேட் குமாரில்.

//@mpgiri

ADVERTISEMENT

கார் ஓட்டும் பெண்களுக்கு:

காரின் பின் கண்ணாடியின் A lady on driver seat என்று எழுதிவைக்கவும். 100 மீட்டர் தள்ளி தொடர வசதியாக இருக்கும். //

ADVERTISEMENT

‏// @palanikannan04

வாழ்ந்தா கெத்தா வாழ்ந்துட்டு சாகணும்னு சொல்றானுங்க,

ADVERTISEMENT

இப்ப இருக்கற விலைவாசிக்கு சாதாரண மனுசனா வாழ்ந்துட்டு செத்தாலே கெத்து”தான்..//

// @VvkTweets

இப்போ அடி வாங்கின பையன்கூட சூர்யா ஒரு செல்ஃபி எடுக்கணும்

அதுதானடா உங்க கிளைமாக்ஸ்!

காக்காமுட்டை ஸ்டாலின் வெர்சன் மாதிரி இது சூர்யா வெர்சன் //

//@BoopatyMurugesh

மநகூ 140 தொகுதியில முன்னிலை வந்துட்டு இருந்துச்சு… எங்க அம்மா வந்து மூஞ்சில தண்ணியத் தெளிச்சு எழுப்பி விட்டாங்க ????

வெற்றியைத் தடுத்தது அம்மாதான் //

//@HariHariramana

மதிமுக தொடர்ந்து மக்களின் பிரச்னைகளுக்காகப் போராடும்: வைகோ

#மக்கள்கிட்ட கேட்டா அந்தப் பிரச்னையே நீங்கதான்னு சொல்லுவாங்கண்ணே….. 😉 //

//@thoatta May 31

வரலாற்றில் இன்று # இதே மே மாசம் 1998ல் ரீமாசென் மேஜராகி இத்தோடு 18 வருடங்கள் ஆகின்றன. //

//@Piramachari

கோகுல்ராஜ் தற்கொலை செய்துகொண்டதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது – யுவராஜ்

♦ அப்பறம் ஏண்ணே உள்ள உக்காந்து கம்பிய எண்ணிக்கிட்டு இருந்த, வெட்டியா. //

//@kvp_rk

கோகுல்ராஜ் தற்கொலைதான்: யுவராஜ் பேட்டி

அதிமுக-வுக்கு தொகுதிய அள்ளிக் கொடுத்திருக்கிங்க. நீங்க என்ன வேணும்னாலும் செய்யலாம், பேசலாம்//

// ‏@mosi002

திமுக – காங் கூட்டணியை பிளவுபடுத்த உளவுத்துறை சதி – கருணாநிதி

# நீங்க கூட்டுச் சேந்ததுக்கு சந்தோசப்பட்ட மொத ஆளு அவிகதேன் தலீவா..//

// @msumeshkumar

வைகோ தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடக்குதாம்… அடுத்த ‘புராஜக்ட்டுக்கு’ தயாராயிட்டாய்ங்க போல //

// நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

பால் விலையை லிட்டருக்கு 40 ரூபாயில் இருந்து 25 ரூபாயாகக் குறைப்பேன் என தேர்தல் அறிக்கையில் கூறிய அம்மையார், ஆட்சிக்குவந்த ஒரே வாரத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் கூடியிருப்பதன் மர்மம் என்ன தெரியுமா…

தயாரிப்புச் செலவு கட்டுக்கடங்காமல் போவதால், தனியார்கள் எல்லாம் விலையைக் கூட்டும் நேரத்தில், அம்மையார் ஆவின் பால் விலையைக் கூட்டாமல் விற்பதே மாபெரும் சாதனை என தனது அல்லக்கை பத்திரிகைகளை எழுதவிட்டு அதன்மூலம், பால் விலைக்குறைப்பை தவிர்க்க அரசேபோடும் மறைமுகத் திட்டம்தான் இது என தகவல்கள் கூறுகின்றன.. //

-லாக் ஆஃப்,”

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share