ஏம்மா இதெல்லாம் ஒரு தப்பாம்மா – அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

ஒரு பக்கம் பிரதமர் மோடி, கக்கூஸ் கழுவுற மாதிரி போட்டோஷாப்ல வேலை பார்த்தும், சீனாவின் ஷங்காய் நகரை அஹமதாபாத் என்று ஜிமிக்ஸ் பண்ணி வெளியிட்டு, போன பாராளுமன்றத் தேர்தலிலேயே பல படங்கள் வெளியானது. இப்போது, ஜவகர்லால் பல்கலைகழக மாணவர் சங்க தலைவர் கன்ஹையா குமாரின் படம் ஒன்றை வெளியிட்டு, வலதுசாரி அமைப்புகள் வைரலாக்கி வருகின்றன. அதில், சோபாவில் அமர்ந்திருக்கும் கன்ஹைய குமாரின் தோள்மீது அவரது பேராசிரியை நிவேதிதா மேனன் கை போட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.

ஏம்மா இதெல்லாம் தப்பாம்மா”. மும்பை, டெல்லியில் எல்லாம் பஸ் பக்கத்து சீட்டில் பெண்கள் எல்லாம் சங்கோஜம் இல்லாமல் உட்கார ஆரம்பித்து பல வருஷம் ஆச்சு. இதைத்தான் சிக் மைண்ட்-னு சொன்னாரு சிக்மென்ட் ஃப்ராய்டு!

ADVERTISEMENT

இது, வடநாட்டு சிக்மைன்ட் மட்டுமில்ல, நம்ம ஊரில் அக்கா கல்யாணத்தின்போது பொதுத்தேர்வு இருந்ததால் கல்யாணத்துக்கு பள்ளிச் சீருடையுடன் வந்த மாணவன், ஊர் வழக்கப்படி மணமேடைக்கு அழைத்து வந்தான். அதை போட்டோ எடுத்து “டீச்சரை திருமணம் செய்த பத்தாம் வகுப்பு மாணவன்”-னு வாட்ஸ் அப்பில் ஒரு மாசத்துக்கு வடை சுட்டாய்ங்க. எல்லாத்தயும் தப்பான பார்வையாலே பார்த்தா எப்படி பாஸ்.

“என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேமா”

ADVERTISEMENT

*******************************************************************************************************

நல்ல மொரட்டு பீஸ் மாட்டினாலே கதற கதற ஓட்டித்தள்ளும் ட்விட்டர் மக்களுக்கு, வான்டடா வந்து வண்டியில் ஏறிய வடிவேலுபோல, நெட்டிசன்களிடம் மாட்டினார் ராமராஜன். “ஒரு மாட்டுகிட்ட போய் அடுத்த முதல்வர் யாருன்னு கேளுங்க, அது ‘அம்மா’ன்னுதான் கத்தும்”-னு மீட்டிங்கில் பேச, “அட, இது வைரல் மெட்டீரியலாச்சே”ன்னு அப்டியே, ட்விட்டருக்கு அள்ளிக்கிட்டு வந்துட்டாங்க. ராமராஜனின் அம்மா உவமானத்தை நக்கலுட்டு வெளியான ட்விட்டுகள்…

ADVERTISEMENT

//ரெட்டைசுழி{{{® ‏@SENTHIL_WIN

அதிமுகவுக்கு தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று பாம்பிடம் கேட்டபோது “புஸ்ஸ்ஸ்” என்றதால் பரபரப்பு…

#ராமராஜன் பாறைகள் //

// டேய்மோசக்காரா ‏@mosakkara

ஒரு மாடுக்கிட்ட முதல்வர் யாருனு கேட்டா அம்மான்னு சொல்லும்: ராமராஜன்

நம்மகிட்ட மாடு இல்லைன்னு பூனைகிட்ட கேட்டேன்… அது மியாவ்னு சொன்னிச்ச//

//@snake_tweetz அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார் என்று அமெரிக்காவில் உள்ள மாட்டிடம் கேட்டதற்கு அதுவும் “அம்மா” என்றே கூற அமெரிக்கா முழுவதும் பரபரப்பாகி உள்ளது.//

// வேண்டப்பட்ட விரோதி

‏@Piramachari

சரி நாமளும் ட்ரை பண்ணி பாப்போமேன்னு ஒரு எருமைகிட்ட

பதவியில இருக்கும்போதே ஊழல் வழக்கில் சிறைசென்ற முதல்வர் யார்னேன்

அம்மானு கரட்டா சொல்லுது!//

// dinaex ‏@dinaex 8h8 hours ago

ஒரு மாடுகிட்டபோயிஅடுத்த முதல்வர் யாருனு கேட்டால் அம்மானுதான் கத்தும்.-ராமராஜன்

அதே மாட்டிடம் ஸ்டிக்கர் யாரு ஒட்டுனது கேட்டா “அம்மா” னுது //

**************************************************************************************************************************

இந்திரா வலைப்பூக்களில் எழுதி வருபவர். தற்போதைய முகநூல் ஸ்டேடஸ் லெவலிலும் திரை விமர்சனம் சிறிதாகவும், அழகாகவும் எழுதமுடியும் என்பதற்கு இன்று அவரின் பக்கத்தில் எழுதியுள்ள இந்த கொரிய பட விமர்சனமே சான்று.

// இந்திரா கிறுக்கல்கள்

43 mins ·

“நேசித்தல்னா எப்படி இருக்கணும்“

“பல் துலக்குறது மாதிரி..“

“அப்படினா?“

“இன்னொருத்தருக்கு நிரூபிக்கணும்னு நாம பல் துலக்குறதில்ல“

—————– படித்ததும் சட்டென சிரிப்பு வரவழைக்கும் வசனம்தான். ஆனால் அதுதான் உண்மையும் கூட.

More than Blue – புற்றுநோயால் வாழ்நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் ஹீரோ, தன் தோழியுடனான காதலை, வெளிப்படுத்த விரும்பாமல் நட்பாகத் தொடர்கிறார். இறுதியில் அவளுக்குத் தெரியப்படுத்தாமலேயே விலகுகிறார். சராசரி தமிழ் சினிமாவுக்கே உரிய கேன்சர் கதைதான். ஆனாலும் இங்குதான் ஒரு ட்விஸ்ட். அதற்குப் பிறகான விளக்கங்களில், பார்த்து முடித்த காட்சிகளுக்கான கேமராக் கோணங்கள் நிச்சயம் ரீவைண்ட் செய்து பார்ப்போம்.

இருவருக்குமான நட்பு அழகு. தான் நேசித்தவளின் திருமண உடையைத் தேர்வு செய்ய உடன்வந்து, பின் ட்ரையல் பார்ப்பதற்காக அதைத் தானே போட்டுப் பார்த்து கண்ணாடியில் அழும்போது அழவைத்திருக்கிறார். அதன் பின்னணிக் காட்சியில் அவரைத் தவிர மற்றவர்கள் அசையாமல் சிலையாவது படத்தின் அழுத்தத்திற்கு ஒரு உதாரணம். இதுபோன்ற கதைகளுக்கு பின்னணி இசைதான் வலு. அதை மிகச்சரியாய் செய்திருக்கிறது அந்த ஒற்றைப் பியானோ.

# More than Blue (2009) (Korean)

Director: Won Tae-Yeon //

-லாக் ஆஃப்,”

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share