அஜித் பட நடிகரின் கார் விபத்து… பலியான தந்தை : டிரைவர் சொல்லும் காரணம்!

Published On:

| By christopher

what happened in shine to chacko car accident and his father died

எதிரே வந்த லாரி திடீரென எங்களை நோக்கி திரும்பியதால், காரை கட்டுப்படுத்த முடியவில்லை மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தையை பறித்த விபத்து பற்றி கார் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். what happened in shine to chacko car accident and his father died

பிரபல மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ சமீபத்தில் வெளியான நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

தொடர்ந்து கஞ்சா வழக்கில் சிக்கிய அவரை பிடிக்க போலீசார் முயன்றபோது, ஹோட்டலில் இருந்து அவர் தப்பியோடிய காட்சிகள் இணையத்தில் வைரலானது. பின்னர் கைதான, அவர் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்த நிலையில் தருமபுரியில் இருந்து பெங்களூருக்கு சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 6.30 மணியளவில் டாக் சாக்கோ அவரது பெற்றோர் மற்றும் சகோதரருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிகழ்ந்த கோர விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அவரது தந்தை சிபி சாக்கோ, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 70. காயமடைந்த டாம் சாக்கோ, அவரது தாயார் மற்றும் சகோதர் மூவரும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிபி சாக்கோ

இதற்கிடையே இந்த கார் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து டிரைவர் அனீஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், ”தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நாங்கள் சென்றுக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி திடீரென இடதுபுறம் எங்கள் கார் நோக்கி திரும்பியது. அப்போது காரின் சென்சார் அமைப்பு காரணமாக ஸ்டீயரிங் லாக் ஆனது. டயர்களில் ஒன்று வெடித்து. தொடர்ந்து கட்டுபாடில்லாமல் சென்ற கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகாலையில் காரில் பயணித்த அனைவரும் நன்றாக தூங்கி கொண்டிருந்தனர். கார் விபத்தில் சிக்கியதும் எனக்கு பின்னால் சீட் பெல்ட் அணியாமல் தூங்கிக் கொண்டிருந்த சாக்கோவின் தந்தை பலமாக முன்னோக்கி தூக்கி எறியப்பட்டு, அவரது தலை முன் இருக்கையில் மோதியது. இதனால் அவருக்கு கடும் இரத்தப்போக்கு ஏற்பட்டது.

அதே போன்று சீட் பெல்ட் அணியாமல் பின் இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் கையில் காயம் ஏற்பட்டது. அவரது தாயார் மற்றும் சகோதரருக்கும் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சாக்கோவின் தந்தைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த சாக்கோ உட்பட மூவரும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு சீரான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே கார் ஓட்டுநர் அனிஷுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share