ADVERTISEMENT

2கே கிட்ஸ் யார் தெரியுமா? – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். ’மாம்ஸ், இந்த 90ஸ் கிட்ஸுக்கும், 2k கிட்ஸுக்கும் என்ன வித்தியாசம்?’னு ஒரு வாண்டு கேட்டான்.

ADVERTISEMENT

”டேய், நல்லா படிச்சி நல்ல வேலைக்கு போகல… இன்னும் கல்யாணம் ஆகலனு வருத்தப்பட்டா அது 90ஸ் கிட்ஸ்…. ஆனா தக்லைஃப் படம் பாத்துட்டு வந்து… த்ரிஷா சரியில்ல… அவள விட நா எப்படி ஆடுறேன் பாருனு சுகர் பேபி பாட்டுக்கு ரீல்ஸ் எடுத்தா அது 2கே கிட்ஸு”னு சொன்னேன்.

ADVERTISEMENT

’சூப்பர் மாம்ஸ்… நீ பேசுனதையே ரீல்ஸ்ல போட்டு லைக்ஸ் அள்ளுறேன்’னு சொல்லிட்டு கிளம்பிடுச்சி அந்த வாண்டு. ஓஹோ இது GenZ போல… update kumaru memes and trolls june 6

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls june 6

𝗩𝗶𝗴𝗻𝗲𝘀𝗵 𝗗 𝗦 𝗞 ✨

ADVERTISEMENT

தக் லைஃப் படத்துல ” விண்வெளி நாயகா ” சாங் வர்றப்ப ஏன் திருவள்ளுவர் வர்றாரு…

டவுட்!

ADVERTISEMENT

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ஆண்டவரே, படம் சரி இல்லைன்னு ரிவியூஸ் வருதே, இதை எப்படி பார்க்கறீங்க?

இதுவும் எங்க புரமோசன்ல ஒரு பகுதி தான். எல்லாரும் ரிவியூ படிச்சுட்டு படம் மோசமா இருக்கும்னு எதிர்பார்ப்போட தியேட்டருக்கு போவீங்க, சுமாரா இருந்தா கூட ‘பரவால்லயே, படம் நினைச்சதை விட நல்லா இருக்கே’ ன்னு நினைப்பீங்க

✒️Writer SJB✒️

ஏம்மா போன மாசம் தானே சம்மதம்னு விவாகரத்து வாங்கிட்டு போன இப்ப வந்து அத கேன்சல் பண்ண சொல்றியே ஏன்?

அவரைவிட ஆறு வயசு பெரியவளோட அவர் கிளப் கோயில் னு சுத்துறத என்னால பாக்க முடியல ஜட்ஜ் ஐயா..!

✒️Writer SJB✒️

அக்னி நட்சத்திரம் இன் ஜூன் ~

மே மாசம் நான் வரவே இல்லைன்னு சந்தோஷப்பட்டது நீ தானா?

இப்போ எப்படி இருக்கு…🔥

பாம்பாட்டி சித்தர்

இன்னும் இருபது வருஷம் கழிச்சு கல்யாணம்’ங்கிறதே கேள்விக்குறியாக போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, அப்ப அரசாங்கம் அநேகமாக கல்யாணம் பண்ணிக்குறவங்களுக்கு அரசு சலுகைகள் அல்லது அரசு வேலை கொடுக்கப்படும்னு சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை…

Abhi&Abhi

“இந்த ஊரில் எறும்பு கூட யாரையுமே கடிக்காதுடா” இப்படி சூர்யா பாடுறார். பாட்டு முடிஞ்சதும் கலாபவன்மணிய பாம்பு கடிக்குது 😬.

ஒருவேள அது பக்கத்து ஊர் பாம்பா இருக்கும் போல…

Mannar & company™🕗

படம் நல்லா இல்லைன்னு சொல்லலை,
இருந்திருந்தால் நல்லாருக்கும்னு தான் சொல்றோம்!

தக் லைஃப்

கலாரசிகன்

பொண்ணு பாக்க போய் வந்து ஏண்டா அழுதுட்டே இருக்க?

குனிஞ்ச தலைநிமிராத அடக்கமான பொண்ணு வேணும்னு புரோக்கர் கிட்ட கேட்டு இருந்தேன்

அவன் என்ன நேரா சுடுகாட்டுக்கு கூட்டிட்டு போய் குனிஞ்ச தலை நிமிராம செல்போன் பார்த்துட்டு ரோட்ல நடந்து போன பொண்ணு ஆக்சிடென்ட் ஆகி இங்க தான் அடக்கம் ஆகி இருக்கா பாருங்கன்னு சொல்லிட்டான்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share