தனுஷுடன் மோதும் அதர்வா!

Published On:

| By uthay Padagalingam

atharva new movie clash dhanush kubera

சில திரைப்படங்கள் குறித்த தகவல்கள் பெரிதாக ரசிகர்களை ஈர்க்காது. அது குறித்த அப்டேட்கள் கவனத்தைக் குவிக்காது. ஆனால், பெரிய படங்களோடு அவை வெளியாகிறபோது பெரும்பாலான ரசிகர்கள் உற்றுநோக்குவார்கள். ‘அந்த படத்தோட மோதுற அளவுக்கு இதுல விஷயம் இருக்குமா’ என்று யோசிப்பார்கள். அதுதான் குறிப்பிட்ட படத்திற்கான விளம்பரம். அந்த வகையிலான கவன ஈர்ப்பை உருவாக்கியிருக்கிறது அதர்வா நடித்துள்ள ‘டிஎன்ஏ’ திரைப்படம். atharva new movie clash dhanush kubera

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில், தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ள ‘குபேரா’ வெளியாகும் ஜுன் 20 அன்று இப்படமும் வெளியாகவிருக்கிறது.

ADVERTISEMENT

ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா படங்களின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இதனை இயக்கியிருக்கிறார். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைமையில் அமைந்ததுடன், வழக்கத்திற்கு மாறான திரைக்கதையையும் கொண்டிருந்தன. உள்ளடக்கத்தைத் தாண்டி அவை பேசிய அரசியலும் புதிதாக இருந்தன.

ADVERTISEMENT

ஸ்ரீகாந்த் ஹரிகரன், சத்யபிரகாஷ், அனல் ஆகாஷ், பிரவீன் சைவி, சஹி சிவா என ஐந்து இசையமைப்பாளர்கள் ’டிஎன்ஏ’ படத்தின் பாடல்களுக்கு இசையமைத்திருக்கின்றனர். பின்னணி இசை கோர்த்திருக்கிறார் கிப்ரான்.

மலையாள நடிகை நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா, சுப்பிரமணிய சிவா, கருணாகரண் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

‘டிஎன்ஏ’ டீசர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. மருத்துவப் பின்னணியில் நடக்கிற குற்றங்களைப் பற்றி பேசுகிற ஆக்‌ஷன் த்ரில்லர் வகைமை திரைப்படமாக இது இருக்கும் என்ற நம்பிக்கையை அந்த டீசர் தந்தது.

அதற்கேற்ப, இப்படத்தின் உள்ளடக்கம் செறிவுடன் அமைகிற பட்சத்தில் ‘குபேரா’வுக்கு சரியான போட்டியாகத் திகழும். ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக இரு படங்களுக்கும் செல்லும் நிலைமையும் கூட உருவாகலாம். அதுதானே திரையுலகம் ஆரோக்கியமாகச் செழிக்க வழி வகுக்கும்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share