தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா பிரியாணி மற்றும் தூக்கத்தால் சரி செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா கடந்த ஞாயிறன்று தனது குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் புட்ட பர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகா சமாதியில் வழிபாடு நடத்தினார்.
இந்நிலையில் புட்டபர்த்தியில் இருந்து நேற்று அதிகாலை காரில் ஐதராபாத் திரும்பிய போது எதிர்பாரத விதமாக ஐதராபாத் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தெலுங்கானாவின் கட்வால் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போது அவரது கார் விபத்துக்குள்ளானது.
சாலையில் பின்னால் வந்த கார் மோதியது. இந்த விபத்தில் கார் லேசான சேதம் அடைந்தது. காயங்கள் எதுமின்றி விஜய் தப்பினார். இதுகுறித்து விஜய் தேவரகொண்டாவின் ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தனது எக்ஸ் பதிவில், “கார் சேதமடைந்தது, ஆனால் நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம். ஒரு ஸ்ட்ரென்த் உடற்பயிற்சியும் செய்துவிட்டு இப்போது தான் வீட்டிற்குத் திரும்பி வந்தேன்.
என் தலை வலிக்கிறது, ஆனால் பிரியாணி மற்றும் தூக்கத்தால் சரி செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை. அதனால் உங்களுக்கெல்லாம் என் பெரிய அணைப்புகளையும் அன்பையும் கொடுக்கிறேன். செய்திகள் உங்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.