’பைசன்’ படத்தை நீங்க பார்த்தே ஆகணும் : துருவ் விக்ரம் வேண்டுகொள்!

Published On:

| By christopher

dhuruv request to all should watch bison movie

பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான வர்மா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் துருவ். அதன்பின்னர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது தந்தையும் நடிகருமான விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் நடித்திருந்தார். எனினும் அவருக்கான அடையாளத்தை இப்படங்கள் கொடுக்கவில்லை என விமர்சன ரீதியாக கருத்துகள் நிலவுகிறது.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து பைசன் திரைப்படத்திற்காக உடல் வருத்தி நடித்துள்ள துருவ், தனது முதல் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

இந்த நிலையில் பைசன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னை வேளச்சேரியில் உள்ள மாலில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், “என் பெயர் துருவ், நான் இதுவரை இரண்டு படங்கள் பண்ணி இருக்கேன். நீங்க அந்த இரண்டு படங்களையும் பார்க்கலைன்னாலும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

ADVERTISEMENT

ஆனா பைசன் படத்த நீங்க பார்க்கணும். நான் இந்த படத்துக்காக என் 100 சதவீத முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கேன். மாரிசெல்வராஜ் சார் இறங்கி சம்பவம் பண்ணிருக்காரு. நீங்க குடும்பத்தோடயோ, காதலியோடயோ, காதலனோடயோ போகலாம், ஆனா நீங்க எல்லாரும் நிச்சயம் இந்த படத்த பாக்கணும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share