சர்ச்சைக்குள்ளான ஜானி மாஸ்டர் விக்னேஷ் சிவன் காம்பினேஷன்!

Published On:

| By Minnambalam Desk

Vignesh Shivan Criticised by netizens Johnny Master

டாம்க்ரூஸ் Vignesh Shivan Criticised by netizens

தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் குறிப்பிடத்தக்க டான்ஸ் கொரியோகிராஃபர் ஆகத் திகழ்ந்தவர் ஜானி. தமிழில் ‘குலேபகாவலி’ தொடங்கி ‘ஜெயிலர்’ வரை விரல் விட்டு எண்ணத்தக்க பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார். ‘ரஞ்சிதமே’, ‘அரபிக்குத்து’, ‘காந்தக் கண்ணழகி’, ’செல்லம்மா’, ‘சும்மா சுர்ருன்னு’, ‘காவாலா’ என்று எல்லாமே ‘டான்ஸ் ஹிட்’கள் தான். ஆனால், இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை.

தன்னைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஜானி மாஸ்டரிடம் உதவியாளராகப் பணியாற்றிய பெண் ஒருவர் புகார் தெரிவித்த காரணத்தால், அவர் கைதானார். குற்றம் நிகழ்ந்தபோது பதினெட்டு வயதுக்குக் குறைவானவராக அப்பெண் இருந்த காரணத்தால், போக்சோ வழக்கு பாய்ந்தது. அதன்பிறகு, அவரைப் பற்றிய பேச்சு திரையுலகில் இல்லாமல் இருந்தது. Vignesh Shivan Criticised by netizens

Vignesh Shivan Criticised by netizens

கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார் ஜானி. கூடவே, ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் பணியாற்ற வாய்ப்பு தந்தமைக்கு நன்றி’ என்று குறிப்பிட்டிருந்தார். திரையில் நாம் செய்த மாயாஜாலத்தைக் காண ஆவலோடு இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அந்த பதிவு சட்டென்று வைரல் ஆனது.  

அதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்தார். எல்ஐகே படக்குழு உங்களையும் உங்களது உற்சாகத்தையும் நிறையவே விரும்புகிறது என்று பதிவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, ஜானி மாஸ்டர் விக்னேஷ் சிவன் காம்பினேஷனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ‘போக்சோ வழக்கில் கைதானவருக்கு எப்படி வாய்ப்பு தரலாம்’ என்று பலர் அப்பதிவுகளுக்கு எதிர்வினை ஆற்றினர். இதே கேள்வியைப் பின்னணி பாடகி சின்மயியும் எழுப்பியிருந்தார்.

ஆனாலும், இதுவரை விக்னேஷ் சிவனோ, நயன்தாராவோ, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி தயாரிப்பு தரப்போ இது பற்றி எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ரிலீஸை ஒட்டி, இதற்கான பதிலை ஆற அமரச் சொல்லக்கூடும். யார் கண்டது?  

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share