நடிப்பில் கால் பதிக்கும் கிரிக்கெட் வீரர்!

Published On:

| By Minnambalam Desk

Suresh Raina Makes his Debut in Tamil Movie

டாம்க்ரூஸ் Suresh Raina Makes his Debut in Tamil Movie

செலிப்ரெட்டி கிரிக்கெட் லீக்கில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி தொடங்கி இதர மொழி திரையுலகைச் சேர்ந்த நாயகர்கள், நடிகர்கள் பேட்டும் பந்தும் ஸ்டம்புமாக திரிந்ததை நாம் கண்டிருக்கிறோம். போலவே, கிரிக்கெட் வீரர்களில் சிலர் நடிகர்களாக ஆனதையும் ரசித்திருக்கிறோம். விளம்பரப் படங்கள், அரசு செய்திப்படங்கள், ஆவணப்படங்கள் தாண்டி நடிப்பிலும் சிலர் முத்திரை பதித்திருக்கின்றனர். சலீல் அங்கோலா, அஜய் ஜடேஜா, பிரெட் லீ என்று பலர் இதற்கு உதாரணமாகத் திகழ்கின்றனர். சமீபத்தில் ஷிகர் தவான் ஒரு மியூசிக் ஆல்பத்தில் தலைகாட்டியிருந்தார். ‘ப்ரெண்ட்ஷிப்’ என்றொரு தமிழ் படத்தில் ஹர்பஜன் சிங் நடித்தார். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். Suresh Raina Makes his Debut in Tamil Movie

சில ஆண்டுகளுக்கு முன்னர் ’லெட்ஸ் கெட் மேரிட்’ எனும் தமிழ் படத்தைத் தயாரித்தார் மகேந்திர சிங் தோனி.

ADVERTISEMENT

அந்த வரிசையில் புதிதாக இன்னொருவர் சேர்ந்திருக்கிறார். அவர் வேறு  யாருமல்ல, கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.

டி.சரவணகுமார் தயாரிப்பில், லோகன் இயக்கத்தில் நாயகனாகத் தமிழில் அறிமுகம் ஆகிறார். இன்னும் இப்படத்திற்குப் பெயரிடப்படவில்லை. இது பற்றிய அறிவிப்பு வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Suresh Raina Makes his Debut in Tamil Movie

சின்ன தல வந்தான் உள்ளே’ என்ற வரவேற்போடு தமிழ் திரையுலகில் நுழைந்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா. படத்தின் உள்ளடக்கத்தைப் பொறுத்து, அந்த வரவேற்பின் பரிமாணம் எப்படிப்பட்டது என்பது தெளிவாகத் தெரிந்துவிடும்..

சந்தோஷ் நாராயணன் இசை, முத்துராஜின் தயாரிப்பு வடிவமைப்பு, ரசூல் பூக்குட்டியின் ஒலி வடிவமைப்பு, சுப்ரீம் சுந்தரின் ஸ்டண்ட் கொரியோகிராஃபி என்று வித்தியாசமான டீமுடன் களமிறங்குகிறார் சுரேஷ் ரெய்னா.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share