சாய் அப்யங்கருக்கு லாலேட்டன் தந்த வரவேற்பு!

Published On:

| By Minnambalam Desk

Sai Abhyankkar debuts in Malayalam Movie Balti

டாம்க்ரூஸ் Sai Abhyankkar debuts in Malayalam Movie Balti

ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே, அதில் இடம்பெற்ற நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வேறு படங்களில் வாய்ப்பு கிடைப்பதென்பது மிக அரிதாகத்தான் நிகழும். அதுவும் கூட, முதல் திரைப்படம் வெளியாகத் தாமதம் ஆனாலோ அல்லது அப்படம் தொடர்பான எவரேனும் அடுத்த வாய்ப்பினைத் தந்தாலோ அப்படியொன்று சாத்தியம் ஆகும்.

அந்த எண்ணங்களை அடித்து நொறுக்குவது போல, வெவ்வேறு திசைகளில் இருந்து வாய்ப்பினைப் பெற்று வருகிறார் புதுமுக இசையமைப்பாளர் சாய் அப்யங்கர். ஒருகாலத்தில் பின்னணி பாடுவதில் முன்னணியில் இருந்த திப்பு, ஹரிணி தம்பதியரின் மகன் இவர். Sai Abhyankkar debuts in Malayalam Movie Balti

ADVERTISEMENT

கட்சி சேர, ஆசை கூட, சித்திர புத்திரி என்று மூன்று சிங்கிள்கள் இவரது இசையமைப்பில் வெளியாகியிருக்கின்றன. அவற்றின் வீடியோவிலும் முகம் காட்டியிருக்கிறார். அது தந்த புகழோ என்னவோ, இருபது வயதில் அரை டஜன் படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்.

’டூடு’, ‘கருப்பு’, ‘பென்ஸ்’ மற்றும் ‘சிம்பு 49’ படங்களுக்கு அவர் இசையமைப்பாளர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது போக அட்லீ – அல்லு அர்ஜுனின் தெலுங்குப் படத்திற்கும் அவரே இசையமைப்பதாக முடிவாகியிருக்கிறது.

ADVERTISEMENT

இந்த படங்களை எல்லாம் முந்திக்கொண்டு, அவரை அறிமுகம் செய்வதென்று மலையாளத் திரையுலகம் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. அங்குள்ள இளம் நடிகர்களில் ஒருவரான ஷேன் நிகமின் 25வது படமான ‘பல்டி’ மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகவிருக்கிறார் சாய் அப்யங்கர். அது குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது.

உன்னி சிவலிங்கம் இயக்குகிற இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள் பெயர்கள் இருந்தபோதும் இசையமைப்பாளர் பெயர் இடம்பெறவில்லை. அதேநேரத்தில் அதன் பின்னணி இசை ரசிகர்களை ‘கூஸ்பம்ஸ்’ ஆக்கியது.

ADVERTISEMENT

எப்படியும் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு தனியாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோகன்லால் அவரை மொபைலில் அழைத்து வரவேற்பதாக இந்த வீடியோ அமைந்திருக்கிறது. அந்த ‘மெஸ்மரிச’ குரல் ஒலித்த நொடியில் திரையில் தீப்பற்றுகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழக கேரள எல்லையோரத்தில் நடக்கிற கபடி போட்டிகளை மையப்படுத்திய கதை ’பல்டி’ என்பதும், ’உதயன்’ என்ற கபடி வீரராக ஷேன் நிகம் இதில் நடிக்கிறார் என்பதும் ஏற்கனவே வெளியான வீடியோவில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. அந்த குழுவைச் சேர்ந்தவராக, பார்சலை பிரித்து தனது பெயர் பொறித்த டிசர்ட்டை கையிலெடுத்து சாய் அப்யங்கர் பார்ப்பதாக அமைந்திருக்கிறது இந்த அறிவிப்பு வீடியோ.

திரையுலகில் ‘மார்க்கெட்டிங்’ உத்திகளுக்கு எப்போதுமே மவுசு உண்டு. என்றபோதும், இன்றைய ‘சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்’கின் நீள அகலங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ப சாய் அப்யங்கர் சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் வடிவமைக்கப்படுகின்றன. Sai Abhyankkar debuts in Malayalam Movie Balti

அதனைத் தொடர்ச்சியாகக் காணும்போது, ‘மோனிண்ட பின்னே வல்லிய பிஆர் டீம் உண்டு’ என்றே தோன்றுகிறது..! Sai Abhyankkar debuts in Malayalam Movie Balti

@SaiAbhyankkar x BALTI Movie | Shane Nigam | Unni Sivalingam | STK Frames
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share