இன்னைக்கு நண்பன் ஒருத்தன் கூட டீக்கடைக்கு போயிருந்தேன்.
மாஸ்டர்கிட்ட ரெண்டு டீ போட சொல்லிட்டு பேசிக்கிட்டு இருந்தேன்.
“என்னடா சோகமா இருக்கேன்னு?” நண்பன் கிட்ட கேட்டேன்.
“இல்லடா… எனக்கு பிரேக் அப்னு” சொன்னான்.
“டேய்… போன வாரம் தான் பிரேக் அப்னு சொன்ன, மறுபடியும் பிரேக் அப்பானு” கேட்டேன்.
“இல்லடா… நாங்க வாரம் வாரம் சண்டை போடுவோம். அதனால வாரம் வாரம் பிரேக் அப் ஆகும்னு” சொன்னான்.
இவனையெல்லாம் வச்சிக்கிட்டு என்னத்த செய்யுறது… update kumaru memes jokes
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
மேக்கப் என்பது எவ்வளவு நேரம் செய்ய முடியுமோ அவ்வளவு நே(கோ)ரமாக செய்வது.

balebalu
உட்கட்சி பிரச்சினைல எல்லா கட்சியும் இரண்டா , நாலா பிரிஞ்சி கிடக்கே எப்படி உன்னோட கட்சியை மட்டும் பிரிக்கவே முடியாது ன்னு அவ்வளவு நம்பிக்கையா சொல்லுறே ஏன்னா கட்சில நான் மட்டும் தான இருக்கேன் எப்படி பிரிக்க முடியும்?

Sasikumar J
காபி கப் க்கு கூட ஒரு கைப்பிடி இருக்கு, உன்னை பிடிக்க யாருமே இல்லயே…!

iQKUBAL
ஆபீஸ் பிரச்சனை, வீட்டு பிரச்சனை, கடன் பிரச்சனை..
இது இந்த வாரத்தோட நிலைமை தான்..
அடுத்த வாரம் என்னென்ன பிரச்சனை இருக்குன்னு அப்றம் பாக்கலாம்.. 🥲

ச ப் பா ணி
தூக்கத்தில் வரும் அழையா விருந்தாளி “அலாரம்”!

Baske₹
கடன் வாங்கினவன் திருப்பி தரணும் என்று நினைத்தால் கொஞ்சம் கொஞ்சமா தருவான்.
அப்படி தரவில்லை என்றால் அந்த கடன் வாராக் கடன் தான்
பூவேந்தன்
வீட்ல நடக்றத ஆபிஸ்ல பேசாத
ஆபிஸ்ல நடக்றத பத்தி வீட்ல பேசாத
டேய் நாங்க ரெண்டு பேரும் ஓரே ஆபிஸ்லதான் வேலை பாக்றோம்..அதுவும் இப்ப ஒர்க் ஃப்ரம் ஹோம்டா.

balebalu
15 வருடமா மோசடி புகார் உள்ள ஒருவருக்கு எப்படி கல்லூரியில் வேலை கொடுத்தாங்க
அதுவும் இப்ப HOD 🤔🙄
மாணவிகள் பாவம்😔
லாக் ஆஃப்
