நடிகர் சிலம்பரசன் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக இன்று (அக்டோபர் 7) அறிவிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை படத்தின் அடுத்த பாகமாக வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பதாக தகவல் வெளியானது.
தனுஷ் நடிப்பில் வெளியான வட சென்னை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில், STR 49′ என்று குறிப்பிடப்பட்டு வந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, சிம்பு நடிக்கும் படத்தின் பெயரை டைட்டிலை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அரசன் என படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், கையில் கத்தியுடன் சிம்பு நிற்கும் போஸ்டர் இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

போஸ்டரில் சிம்புவின் முகம் தெரியாதபடி வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வடலூர் வடலூரில் அமைந்துள்ள சத்திய ஞான சபையில் வள்ளலாரை நடிகர் சிலம்பரசன் வழிபட்டார். அப்போது அரசன் படத்தில் கெட்டப்பில் அவரைக் கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.
மேலும் எக்ஸ் பக்கத்திலும் #Silamb_அரசன் என்ற ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர்.