மல்லை சத்யாவை மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி இன்று (செப்டம்பர் 8) அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மல்லை சத்யா கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை குறிக்கோள், நன்மதிப்பு. ஒற்றுமை ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையில், பொது வெளியில் கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக செயல்பட்டு கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு 2இன் படி, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு குற்றம் புரிந்துளளார்.
இதனால் கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு -இன் படி, ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி துணைப் பொதுச்செயலாளர், பொறுப்பிலிருந்தும், கழகத்தில் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட திட்டங்கள் விதி-19, பிரிவு-5, விதி-19, பிரிவு- 12, விதி-35, பிரிவு-14, விதி-35, பிரிவு-15 இன் படி துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் அடிப்பை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன்.” என்று கூறப்பட்டுள்ளது.
