டெல்லி செல்லவில்லை.. ‘அந்த ராமரை’ பார்க்க போகிறேன் – செங்கோட்டையன்

Published On:

| By Pandeeswari Gurusamy

Sengottaiyan goes to see Lord Rama in Haridwar

அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் -8) டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் ஹரித்துவார் சென்று அந்த ராமரைத்தான் பார்க்க போகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என தலைமைக்கு பத்து நாட்கள் கெடு விதித்துள்ள சம்பவம் அக்கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கி உள்ளார். இந்நிலையில் செங்கோட்டையனின் குரலுக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் தங்களது அதிமுக கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

ADVERTISEMENT

செங்கோட்டையன் இன்று டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திப்பார் என்று அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இன்று காலை கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ஹரித்துவார் செல்வதற்காக வந்துள்ளேன்.. மனம் சரியில்லாததால் கோயிலுக்கு செல்வதற்காக வந்திருக்கிறேன். கோயிலுக்கு சென்று வந்தால் மனம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்கும் என்பதால் செல்கிறேன் என்றார்.

ADVERTISEMENT

மேலும் என்னுடைய கருத்துக்கு மாறுபட்ட கருத்தை யாரும் சொல்லவில்லை. டிடிவி தினகரன் பேசிய கருத்துக்கு நான் பதில் சொல்ல இயலாது என்றும் அவர் தெரிவித்தார்.

கட்சியின் நல்லதுக்கு நாம் சொல்கிறோம் பல்வேறு முடிவுகளை பொதுச் செயலாளர் எடுத்து இருக்கிறார். அவர் முடிவுக்கு கருத்துக்கள் சொல்ல முடியாது. அதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்றார் செங்கோட்டையன்.

ADVERTISEMENT

பாஜக தலைவர்களை சந்திப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்விக்கு, நான் ஹரித்துவார் சென்று ராமரை தரிசித்து விட்டு நாளை பிற்பகல் விமானத்தில் திரும்புகிறேன்.வேறு யாரையும் சந்திக்கவில்லை என்றார் .

அனைவரும் ஒன்றாக சேர்ந்தால் கட்சி நன்றாக இருக்கும் என்றுதான் சொன்னேன் தொண்டர்கள் ஆறுதல் சொல்லி தைரியமாக இருக்க சொல்கின்றனர். இரண்டு நாட்களாக வீட்டில் இருக்கிறேன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் சந்தித்திருக்கின்றனர். என்றார்.

அதிமுக நிர்வாகிகள் யாரும் சந்தித்தார்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என்று பதில் அளித்தார் செங்கோட்டையன்.

மேலும் ராமர் கோயிலுக்கு தான் செல்கின்றேன். இதுவரை வேறு யாரையும் சந்திக்கவில்லை. யாரிடமும் பேசவில்லை.என்னுடைய கருத்தை பலர் வரவேற்கின்றனர். எச் ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் வரவேற்று இருக்கின்றனர் என்றார்.

இந்நிலையில் செப்டம்பர் ஒன்பதாம் தேதி செய்தியாளர்களை சந்திப்பதாக ஒரு தகவல் வந்தது. ஓபிஎஸ் சந்திக்க வருவார் என்று ஒரு ரூமர் வந்தது. இதில் எல்லாம் உண்மை இல்லை… நேற்று திருமணங்கள், மருத்துவமனை திறப்பு விழா என வழக்கமான பணிகளை மேற்கொண்டேன் என்றார்.

ஹரித்துவார் செல்ல என்ன காரணம் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, இங்கு இருந்தால் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் வருகிறது. ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்கிறார்கள். அதனால் அமைதியாக வழிபாடு நடத்த ஹரித்துவார் செல்கிறேன் ராமரை மட்டும்தான் சந்திக்கிறேன். ராமாயணத்தில் இருக்கும். ராமர் கம்பராமாயணத்தில் இருக்கும் அந்த ராமரை தான் சந்திக்கப் போகிறேன் என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share