ஆவணி மாத நட்சத்திர பலன் – உத்திரம்!  (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

Published On:

| By Aara

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

அடக்கமாக இருந்தால், ஆனந்தம் அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற உயர்வுகளைப் பெறுவீர்கள். மேலதிகாரிகள் ஒப்படைக்கும் பணியில் அலட்சியம் கூடாது. பிறரைக் குறை சொல்வது, உங்களுக்கே எதிர்மறையாக மாறிவிடலாம், எச்சரிக்கை தேவை.

பணத்தைக் கையாளவதில் நிதானம் முக்கியம்.

வீட்டில் விசேஷங்கள் வரக்கூடிய அறிகுறிகள் தெரியும். வீண் ரோஷத்தால் உறவுகளை உதறவேண்டாம். பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். ஆண் பெண் நட்பில் அதிக நெருக்கம் வேண்டாம். தரல் பெறலில் நேரடி கவனம் முக்கியம்.

செய்யும் தொழிலில் நேரான செயலும் நேர்மையும் முக்கியம். வர்த்தகம் சார்ந்த அனுமதிகளைப் பெறுவதில் அலட்சியம் கூடாது.

அரசியலில் இருப்பவர்கள் வீண் வாக்குறுதிகளைத் தவிருங்கள். உயரதிகாரிகள் அனுமதி பெறாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டாம். அரசுத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைப் பெறுவீர்கள்.

பணவிஷயத்தில் கவனமாக இருங்கள். படைப்புத் துறையினர் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றிபெறுவீர்கள்.

முறையாகத் திட்டமிட்டால் அரசுவழி பாராட்டும் பெறுவீர்கள்.

மாணவர்கள் மறதிக்கு இடம்தராமல் இருப்பது முக்கியம்.

இரவு நேரத்தில் தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டாம்.

ஒற்றைத் தலைவலி, ரத்த நாள உபாதை, கழுத்து வலி வரலாம்.

பெருமாள் வழிபாடு பெருமை சேர்க்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா… இயக்குநர் நித்திலனுக்கு விருது!

மகளிர் உரிமைத் தொகை வழங்க சிறப்பு முகாம்? – தமிழக அரசு விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share