விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ மகாராஜா ‘ திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனுக்கு மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ மகாராஜா ‘. இந்தத் திரைப்படம் நடிகர் விஜய் சேதுபதியின் 50 ஆவது திரைப்படமாகும். பாக்ஸ் ஆஃபிஸில் பல்வேறு சாதனைகளைப் புரிந்த இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பல்வேறு பாராட்டுகளைப் பெற்றது.
மேலும், சில நாட்களுக்கு முன்பு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்கள் இத்திரைப்படத்தை தற்போது வரை புகழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆஸ்த்ரேலியாவில் நடந்துக்கொண்டிருக்கும் ‘மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில்’ சிறந்த இயக்குநருக்கான விருது இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனுக்கு நேற்று வழங்கப்பட்டது.
இந்த விருதுக்காக இயக்குநர் நித்திலனுடன் சேர்த்து பாலிவுட்டை சேர்ந்த இயக்குனர்களாக இமித்யாஸ் அலி ( அமர் சிங் சம்கிலா ) , கபிர் கான் ( சந்து சாம்பியன் ) , கரண் ஜோகர் ( ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி ) ராஜ்குமார் ஹிரானி ( டங்க்கி) விது வினோத் சோப்ரா( 12த் பெயில்) ஆகிய இயக்குனர்களும் மலையாள சினிமாவைச் சேர்ந்த ராகுல் சதாசிவனும் ( பிரம்மயுகம் ) பரிந்துரைக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
என்ன அழகு எத்தனை அழகு… மாடல்களுக்கு சவால் விட்ட சர்ச்சை குத்துச்சண்டை வீராங்கனை!
யு/ஏ சான்றிதழ் கிடைச்சாச்சு… ரிலீஸுக்கு ரெடியாகும் ‘வணங்கான்’!
இனி உள்ளூர் ஆட்டக்காரன்? தோனிக்காக மீண்டும் அந்த விதி… காட்டமான காவ்யா!